“கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறேன், எதுக்குடா இப்படி ஊதாரியா சுத்திக்கிட்டு இருக்க”… காலேஜ் போகாத மகனை திட்டிய தந்தை.. அடுத்த நொடியே நிகழ்ந்த சோகம்…!

By Nanthini on மார்கழி 4, 2025

Spread the love

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள மரூர் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை என்பவருடைய மகன் தினேஷ்குமார் (18). இவர் திண்டிவனம் கோனேரி குப்பத்தில் உள்ள தனியார் கல்லூரியில் கணினி அறிவியல் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இதனிடையே கடந்த 20 நாட்களாக தினேஷ் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். இதனால் அவருடைய தந்தை ஏன் கல்லூரிக்கு செல்லாமல் இப்படி ஊர் சுற்றி கொண்டிருக்கிறாய் என்று கூறி தனது மகனை திட்டி உள்ளார். இதனால் மனமுடைந்த தினேஷ் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சேலையால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

தூக்கில் தொங்கியபடி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கல்லூரி செல்லாமல் இருந்ததற்காக தந்தை திட்டிய விரத்தியில் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.