பெங்களூரு யெலஹங்கா பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் செவ்வாய்க்கிழமை அன்று அதிர்ச்சியூட்டும் கொலைச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர், அங்குள்ள தனியார் உற்பத்தி நிறுவனம் ஒன்றில் ஊழியராகப் பணியாற்றி வந்துள்ளார். இவர் சம்பவத்தன்று யெலஹங்காவில் வசிக்கும் 19 வயது இளம் பெண் ஒருவரைச் சந்திக்க அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அப்போது இருவரையும் ஒன்றாகக் கண்ட அப்பெண்ணின் தந்தை கடும் ஆத்திரமடைந்துள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், அவர் அந்த இளைஞரைத் தாக்கியதில் படுகாயமடைந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இக்கொடூர சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள உள்ளூர் காவல்துறையினர், பெண்ணின் தந்தையைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
