தமிழகத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் அரசு சார்பில் ஒவ்வொரு வருடமும் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகின்றது. ஒவ்வொரு வருடமும் ரொக்க பணமும் வழங்கப்படும் நிலையில் கடந்த 2025 ஆம் ஆண்டு நிதி நெருக்கடி காரணமாக ரொக்கம் வழங்கப்படவில்லை. இதனிடையே 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கமும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் விதமாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு 2.22 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என அரசு அறிவித்தது.
இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை வருகின்ற ஜனவரி 8 ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கும் நிலையில் பரிசு தொகுப்புடன் ரொக்க தொகை வழங்குவது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன், பொங்கல் பரிசு,மக்கள் விரும்பும் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு 3000 ரூபாய் வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியான நிலையில் தற்போது அமைச்சர் வெளியிட்டுள்ள இந்த செய்தி மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…
ஈரானியப் பாலைவனத்தின் பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் அரிய வகை பாம்பான 'சிலந்தி வால் கொம்பு விரியன்' (Spider-tailed horned viper),…
ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…
வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…
தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…