ஆட்டத்தை தொடங்கிய செங்கோட்டையன்… தவெகவில் இணைந்த அதிமுக முக்கிய தலைவர்கள்…. செம குஷியான விஜய்….!

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக விஜய் களத்தில் இறங்கிய பிறகு தமிழக தேர்தல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாகவே உள்ளது. அதிலும் விஜயின் தமிழக வெற்றிக்கழக கட்சியில் அதிமுகவின் மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் இணைந்த பிறகு மாற்று கட்சியினர் பலரும் கட்சி தாவி வருகிறார்கள். குறிப்பாக அதிமுகவில் இபிஎஸ் மீது அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளை டார்கெட் செய்து செங்கோட்டையன் பேச்சுவார்த்தை நடத்தி கட்சியில் இணைத்து வருகின்றார்.

இந்நிலையில் பொங்கலுக்குள் அதிமுகவில் இருந்து பல தலைவர்கள் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைவார்கள் என்று செங்கோட்டையன் கூறி இருந்த நிலையில் அடுத்தடுத்து பலர் கட்சியில் ஐக்கியமாகி வருகின்றனர். சேலத்திலிருந்து பல் பாக்கி கிருஷ்ணன், கரூரிலிருந்து மரியமுல் ஆசியா, சென்னையிலிருந்து ஜேசிபி பிரபாகர் என அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் மூன்று பேர் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைந்தனர். இதனால் அதிமுகவில் அதிருப்தியில் உள்ளவர்களை சரிகட்டும் முயற்சியில் ஈபிஎஸ் களம் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Nanthini

Recent Posts

BREAKING: கனிமவளங்கள் கடத்தல்.. முதல்வர் விஜய்யின் அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…

23 minutes ago

பறவையே உஷார்… “இது வாலு இல்ல, மரண வில்லன்” – நெட்டிசன்களை அதிரவைத்த வைரல் வீடியோ… அம்மாடியோ பயங்கரமா இருக்கே..!!

ஈரானியப் பாலைவனத்தின் பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் அரிய வகை பாம்பான 'சிலந்தி வால் கொம்பு விரியன்' (Spider-tailed horned viper),…

25 minutes ago

இரத்தக் கடலாக மாறிய கடற்கரை.. பாரம்பரியம் என்ற பெயரில் 700 திமிங்கிலங்கள், டால்பின்கள் கொடூர வேட்டை… உலகையே உலுக்கிய கொடூரம்..!!

ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…

29 minutes ago

“இனி இப்படித்தான்” வங்கிகளில் கோல்டு லோன்… RBI வங்கியின் அதிரடி அறிவிப்பு..!

வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…

32 minutes ago

பாவம்..! நடுரோட்டுல அனாதையா நிக்குறாரு விஜயபாஸ்கர்..எங்கே போறதுன்னு தெரியாம… திமுக அமைச்சர் ரகுபதி உருக்கம்..!!

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…

44 minutes ago

டிவி சேனல் தொடங்கும் முதல்வர் விஜய்… நிதி மற்றும் நிர்வாகப் பொறுப்பில் ஆதவ் அர்ஜுனா..!!

தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…

47 minutes ago