2024 ஆம் ஆண்டு முடிவடைய இருக்கிறது. டிசம்பர் மாதம் தொடங்கிவிட்டது. ஏற்கனவே இந்த டிசம்பர் 1ஆம் தேதி முதல் பல்வேறு மாற்றங்கள் வருவதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. கிரெடிட் கார்டு ஓடிபி சிலிண்டர் விலை என எல்லாவற்றிலும் மாற்றம் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தற்போது சிலிண்டரின் விலை வெளியிடப்பட்டிருக்கிறது.

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்களே தற்போது நிர்ணயித்துக் கொள்கின்றன. ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை எப்படி மாறுகிறதோ அந்த நிலவரத்திற்கு ஏற்ப இந்த சிலிண்டர்களின் விலையும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி வணிகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை அதிகரித்து இருக்கிறது. 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 16 ரூபாய் அதிகரித்து 1980. 50 ஆக விற்பனை செய்யப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. கடந்த மாதம் 61 ரூபாய் 50 காசுகள் விலை அதிகரித்த நிலையில் இந்த மாதமும் விலை அதிகரித்தது மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதனால் வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏற்படுமா என்று மக்கள் அச்சத்தில் இருந்தனர். ஆனால் வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதை 818.50 காசுகள் என்ற விலையிலேயே நீடிக்கிறது. வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை கடந்த ஜூன் மாதம் முதல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த விலை அதிகரிப்பால் ஹோட்டல்களில் உணவுகளின் விலை உயரும் அபாயமும் ஏற்பட்டிருக்கிறது.
