பரபரப்பு..! ஹெச்.ராஜா சாப்பிட்ட எச்சில் இலையில் இபிஎஸ் உருளுவாரா..? சர்ச்சையை கிளப்பிய ஆர்.எஸ். பாரதி..!!

By Soundarya on மார்கழி 12, 2025

Spread the love

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் தீர்ப்பை விமர்சித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்துக் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார்.  நீதிபதி சுவாமிநாதனின் தீர்ப்புக்கு எதிராகப் பேசக்கூடாது என எடப்பாடி பழனிசாமி கூறியதாகக் குறிப்பிட்டுள்ள ஆர்.எஸ். பாரதி, “பிராமணர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் உருண்டால் மோட்சம் கிடைக்கும் என இதே நீதிபதி தான் கூறினார்” என்று சுட்டிக்காட்டியுள்ளார். இதை பழனிசாமி ஏற்றுக்கொள்வார் என்றால், “ஹெச்.ராஜா சாப்பிட்ட எச்சில் இலையில் இபிஎஸ் உருளுவாரா?” என்று  கேள்வியெழுப்பியுள்ளார்.