மேட்டூர் அணையின் நீர் இருப்பு 41.52 டிஎம்சியாகக் குறைந்துள்ளதால் பாசனத்திற்காக இன்று அணை திறக்கப்படவில்லை. அதேநேரம், தமிழகத்திற்குத் தர வேண்டிய 19 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு இதுவரை திறந்து விடவில்லை. இந்தச் சூழ்நிலையில், சாமி தரிசனத்திற்காகக் கர்நாடகாவிற்குச் சென்றுள்ள தமிழக முதலமைச்சர் விஜய், அங்கு கூட்டணியில் உள்ள காங்கிரஸ் அரசிடம் பேசி காவிரியிலிருந்து தண்ணீரைத் திறந்துவிடக் கோர வேண்டும் என திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
கர்நாடகாவில் தற்போதைய அரசியல் சூழலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருப்பதால், அங்குள்ள தலைவர்களுடன் பேசி முதலமைச்சர் விஜய் காவிரி நீரைக் கொண்டு வருவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழகத்தின் டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்த விவகாரத்தில் முதல்வர் விஜய் உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் வட்டாரங்களில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
