நடிகர் பிரபுவுக்கும், குஷ்புவுக்கும் திருமணம் நடந்தது உண்மைதான்.. திருமண தேதியுடன் உறுதிபடுத்திய விக்கிபீடியா..

By Sumathi

Updated on:

இந்தி படவுலகில் இருந்து, தமிழுக்கு வந்து சில படங்களில் மட்டுமே நடித்த நிலையில், தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் நடிகை குஷ்பு. தர்மத்தின் தலைவன் படத்தில், பிரபுவுக்கு ஜோடியாக குஷ்பு நடித்திருந்தார். தொடர்ந்து பல படங்களில் அவர்கள் இணைந்த நடித்த நிலையில், சின்னதம்பி படம், தமிழ் சினிமா வரலாற்றில் திருப்புமுனை படமாக அமைந்தது. இதனால், அவருக்கு சின்னதம்பி குஷ்பு என்றும் ஒரு பெயர் உண்டு. குஷ்புவுக்கு ரசிகர்கள் கோவில் கட்டியதாகவும் ஒரு பரபரப்பான தகவல் அன்று உலா வந்தது.

Khushbu

   

இந்நிலையில், பல படங்களில் ஜோடியாக நடித்த வகையில் பிரபு, குஷ்பு காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்துக்கொள்வார்கள் எனவும் பேச்சு அடிபட்டது. ஆனால், பிரபு ஏற்கனவே திருமணமாகி, பிள்ளைகள் இருந்த நிலையில் இது வதந்தி என்றுதான் பலரும் நினைத்திருந்தனர். இந்நிலையில், கடந்த 1993ம் ஆண்டில் அவர்கள் இவரும் திருமணம் செய்துகொண்டதாக பிரபல தமிழ் நாளிதழில் முதல் பக்கத்தில் படத்துடன் தலைப்பு செய்தியாக வெளியானது. இது தமிழ் சினிமாத்துறை, ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Khushbu

அப்படி எதுவும் நடக்கவில்லை, வதந்தி என்று கூறப்பட்ட நிலையில், முன்னணி தமிழ் பத்திரிகையில் தலைப்பு செய்தியாக அதை வெளியிட்டிருக்கும் போது அது பொய்யாக இருக்க வாய்ப்பே இல்லை என்றுதான் பலரும் கூறி வந்தனர். ஆனால் அந்த பரபரப்புக்கு பிறகு, பிரபு – குஷ்பு இருவரும் படங்களில் இணைந்து நடிக்கவில்லை. பொது இடங்களில், விழாக்களில் கலந்துக்கொண்டாலும் பேசிக்கொள்ளவில்லை. இந்நிலையில் இப்போது விக்கிபீடியா தகவலில் லிவிங் டூ ரிலேஷன்ஷிப்பில் இருந்த பிரபுவும் குஷ்புவும் திருமணம் செய்துகொண்டனர். அவர்களது திருமணம் 1993ம் ஆண்டு, செப்டம்பர் 12ல் நடந்தததாகவும், 4 மாதங்களுக்கு பிறகு அவர் பிரிந்து விட்டதாகவும் விக்கி பீடியாவில் தகவல் பதிவிடப்பட்டுள்ளது. அப்படி என்றால், பிரபு, குஷ்பு திருமணம் நடந்தது உண்மைதான் என்ற அதிர்ச்சியில் ரசிகர்கள் உள்ளனர்.

author avatar
Sumathi