மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…! நள்ளிரவில் வந்த குடும்பத்தினர்… அடுத்த நொடியே நடந்த பயங்கர சம்பவம்…. பகீர் பின்னணி…!!!

By Devi Ramu on ஐப்பசி 17, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் நவாப்கஞ்ச் காவல் எல்லைக்கு உட்பட்ட பார்மியாபூர்வா பகுதியில் ராஜீவ் நிஷாத் (30) என்பவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ராஜீவின் மனைவி அஞ்சலி நிஷாத்திற்கும் அவருக்கும் இடையே குடும்பத் தகராறு நிலவி வந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை நள்ளிரவில் மனைவியின் பெற்றோரும் சகோதரர்களும் வீட்டிற்கு வந்து ராஜீவைத் தாக்கியதாகக் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ராஜீவ் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்துப் புகார் பெற்றுள்ள நவாப்கஞ்ச் போலீசார், பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே உண்மையான காரணம் தெரியவரும் என்றும், தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.