காதலா? துரோகமா?… உல்லாச நேரத்தில் மனைவியின் கொடூர செயல்… ரத்த வெள்ளத்தில் கிடந்த கணவன்… நள்ளிரவில் நடந்த பயங்கரம்…!!

By Gayathri on ஆவணி 15, 2026

Spread the love

டெல்லியில் உள்ள சங்கம் விஹார் பகுதியைச் சேர்ந்தவர் முன்னாலால். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த இவர், கடந்த 10ஆம் தேதியன்று ரதியா மார்க் பகுதியில் உள்ள சாலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இந்தச் சம்பவம் குறித்து அவரது மனைவி நசியாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, நள்ளிரவில் வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்களுடன் ஏற்பட்ட தகராறில் தனது கணவர் கொல்லப்பட்டதாகவும், தான் அந்த நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்ததால் தமக்கு எதுவும் தெரியாது என்றும் அவர் நாடகமாடியுள்ளார்.

எனினும், வீட்டில் ரத்தக்கறைகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டிருந்ததைக் கண்ட போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. நசியாவிடம் தீவிரமாக கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டதில் பல அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளிவந்தன. வீட்டின் அருகாமையில் வேலை செய்து வந்த சமன் என்பவருடன் நசியாவுக்கு கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. கணவரைக் கொலை செய்வதற்காக தனது காதலனிடம் ஐந்து லட்சம் ரூபாய் பேரம் பேசிய நசியா, இருபதாயிரம் ரூபாயை முன்பணமாகக் கொடுத்து இந்தக் கொலையைத் திட்டமிட்டதும் விசாரணையில் அம்பலமானது.

   

திட்டமிட்டபடி சம்பவத்தன்று, உல்லாசமாக இருக்கலாம் என கணவரிடம் ஆசை வார்த்தை கூறி மயக்க மாத்திரையை தண்ணீரில் கலந்து கொடுத்துள்ளார் நசியா. அவர் மயங்கிய பின்னர், காதலன் சமன் மற்றும் அவனது நண்பன் கிஷன் ஆகியோர் வீட்டிற்குள் நுழைந்து முன்னாலாலை கயிற்றால் கழுத்தை நெரித்துள்ளனர். மேலும், அவரது அந்தரங்க உறுப்பில் மின்சாரம் பாய்ச்சிக் கொடூரமாகக் கொலை செய்ததும் பிரேதப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கணவர் அடிக்கடி அடித்துத் துன்புறுத்தியதாலும், செலவுக்குப் பணம் தராமல் கஞ்சத்தனம் செய்ததாலும் இந்த பயங்கர கொலையைச் செய்ததாக கைதான நசியா வாக்குமூலம் அளித்துள்ளார்.