“என் காதலன் இங்கதான் இருப்பான்.. உன்னை டிரம்முக்குள் அடைச்சிருவேன்” திருமணமான 25 நாளில் பயங்கரம்… மனைவி சொன்ன அந்த வார்த்தை.. மிரண்டு போன கணவன்..!!

By Soundarya on ஆனி 24, 2026

Spread the love

திருமணமாகி வெறும் 25 நாட்களே ஆன நிலையில், கணவன் தனது மனைவியையும் அவளது காதலனையும் தவறான சூழ்நிலையில் கைகளுமாகப் பிடித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கணவனை, மனைவியும் அவளது காதலனும் சேர்ந்து கொடூரமாகத் தாக்கியுள்ளனர். மேலும், “இனி என் காதலன் இந்த வீட்டில்தான் என்னுடன் தங்குவான்; நீ எதாவது பேசினால், பழையபடி டிரம்முக்குள் பிணமாக அடைக்கப்பட்டு விடுவாய்” என்று கணவனுக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த பகீர் மிரட்டலால் அந்தப் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது அந்தப் பாவப்பட்ட கணவனின் கண் முன்னாடியே, அவனது மனைவியும் அவளது காதலனும் ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். வாயைத் திறந்தால் எங்கே தன்னைத் தீர்த்துக் கட்டி டிரம்முக்குள் அடைத்து விடுவார்களோ என்ற மரண பயத்தில், அந்த கணவன் எதற்கும் துணியாத அந்த ஜோடிக்கு பயந்து சத்தமில்லாமல் வாழ்ந்து வருகிறார். இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பார்ப்போரை உரைய வைத்துள்ளது.