தெலங்கானா மாநிலம் அச்சம்பேட்டை பகுதியில், அரசுப் பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றும் பத்மா (30), தனது கணவர் லக்ஷ்மன் நாயக்கை (38) கள்ளக்காதலனுடன் சேர்ந்து படுகொலை செய்துள்ளார். பத்மாவிற்கும் மற்றொரு ஆசிரியரான கோபி என்பவருக்கும் இடையே இருந்த கள்ளத்தொடர்பைக் கணவர் கண்டித்ததால், அவரைத் தீர்த்துக்கட்ட இருவரும் திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி, கடந்த மாதம் 24-ஆம் தேதி இரவு தூங்கிக்கொண்டிருந்த லக்ஷ்மனின் முகத்தில் துணியை வைத்து அமுக்கி இருவரும் கொலை செய்துள்ளனர். கொலை செய்த அடுத்த நாள் காலையில், பத்மா எதையும் அறியாதவர் போலக் குளித்துத் தயாராகிப் பள்ளிக்குச் சென்றுள்ளார். அங்கிருந்தபடியே வீட்டின் உரிமையாளருக்குப் போன் செய்து, தனது கணவர் போன் எடுக்கவில்லை என்று நாடகமாடிவிட்டு, பின்னர் அவர் இறந்துவிட்டதாகக் கதறி அழுது சக ஆசிரியர்களை நம்ப வைத்துள்ளார்.
ஆனால், உயிரிழந்தவரின் தம்பி கொடுத்த புகாரால் சந்தேகமடைந்த போலீஸார் நடத்திய விசாரணையில், கள்ளக்காதலுக்காகக் கணவரைக் கொன்றதை ஆசிரியை ஒப்புக்கொண்டார். தற்போது பத்மா மற்றும் அவரது கள்ளக்காதலன் கோபி ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
