“வயல்வெளியில் உல்லாசம், நிர்வாணமாக ஓடிய மனைவி”… ரத்த வெள்ளத்தில் கள்ளக்காதலன்… நள்ளிரவில் நடுங்க வைத்த கொடூரம்…!

By Nanthini on மாசி 5, 2026

Spread the love

தெலங்கானா மாநிலத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் நடந்த ஒரு பயங்கர கொலைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாயிலு – வினோதா தம்பதியினரிடையே கடந்த சில நாட்களாகவே குடும்பப் பிரச்சனை இருந்து வந்த நிலையில், சாயிலு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து அவரைக் கண்காணித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு, இயற்கை உபாதையை காரணம் காட்டி வினோதா வீட்டை விட்டு வெளியேற, சந்தேகமடைந்த சாயிலு ஒரு கோடாரியுடன் அவரை ரகசியமாகப் பின்தொடர்ந்துள்ளார்.

இருள் சூழ்ந்த ஒரு வயல்வெளியில், வினோதா தனது கள்ளக்காதலன் பாலேஷுடன் தனிமையில் இருப்பதை சாயிலு நேரில் கண்டுள்ளார். ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற அவர், தான் மறைத்து வைத்திருந்த கோடாரியால் பாலேஷை சரமாரியாகத் தாக்கினார். இந்த கொடூரத் தாக்குதலில் தலையில் பலத்த காயமடைந்த பாலேஷ், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

   

தனது கண் முன்னாலேயே காதலன் கொல்லப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வினோதா, உயிர் பயத்தில் தனது ஆடைகளைக் கூட கவனிக்காமல், ஆடையற்ற நிலையில் அங்கிருந்து அலறியபடி இருட்டில் ஓடி மறைந்துள்ளார். மனைவியின் கள்ளக்காதலனைக் கொன்ற வேகத்திலேயே சாயிலு நேராக காவல் நிலையத்திற்குச் சென்று, தான் செய்த கொலையை ஒப்புக்கொண்டு போலீசாரிடம் சரணடைந்தார். இது அங்கிருந்த காவலர்களிடையே பெரும் திகைப்பை ஏற்படுத்தியது.

   

தற்போது போலீசார் சாயிலுவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். பாலேஷின் உடல் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனினும், ஆடையின்றி ஓடிய வினோதா இதுவரை வீடு திரும்பவில்லை. அவர் எங்கு சென்றார், உயிருடன் இருக்கிறாரா என்பது குறித்து இன்னும் தெரியவில்லை. மாயமான வினோதாவைத் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.