சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று காண்போரின் நெஞ்சைப் பிழியும் வகையில் அமைந்துள்ளது. தாய் ஒருவர் தனது சிறிய மகனுடன், காலமான தனது கணவரின் கல்லறைக்குச் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். அங்கே கணவரின் கல்லறையைப் பிடித்துக்கொண்டு அந்தப் பெண் விம்மியழுது தன் சோகத்தை வெளிப்படுத்தியுள்ளார். அப்போது தாயின் துயரத்தைப் பார்த்த அந்தச் சிறுவன், தாயின் கையைப் பிடித்துக்கொண்டு, “அம்மா வா வீட்டுக்குப் போகலாம், அப்பா இனி திரும்பி வரமாட்டார்… நம்மளை விட்டுட்டு போயிட்டாரு…” என்று மழலை மொழியில் ஆறுதல் கூறி அழைத்துச் சென்றுள்ளான்.
இந்த உருக்கமான நிகழ்வு கேமராவில் பதிவாகி இணையத்தில் பரவி வருகிறது. இதைப் பார்த்த ஆயிரக்கணக்கான நெட்டிசன்கள், “தனது தந்தையை இழந்து நிற்கும் அந்தச் சிறுவனின் முதிர்ச்சியும், தாயின் துயரமும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத வேதனை” எனக் கூறித் தங்களது ஆழ்ந்த இரங்கல்களையும் கண்ணீர் அஞ்சலியையும் பதிவிட்டு வருகின்றனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…