சித்தப்பாவுடன் கள்ளக்காதல்…. நேரில் பார்த்த கணவன்… மனைவி போட்ட ஸ்கெட்ச்… இறுதியில் நடந்த ட்விஸ்ட்…!

By Nanthini on புரட்டாதி 10, 2025

Spread the love

கர்நாடக மாநிலத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்ய முயற்சி செய்த மனைவி கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் விஜயபுரா பகுதியில் உள்ள இண்டி நகரில் பீரப்பா பூஜாரி என்பவர் வசித்து வரும் நிலையில் இவருக்கு சுணந்தா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் மனைவியை சுணந்தா, சித்தப்பா என்ற நபருடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார்.

அவர்களுடைய கள்ளத்தொடர்பு பற்றி பீரப்பா அறிந்ததால் இருவரையும் கண்டித்துள்ளார். இதனால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது கணவரை தீர்த்து கட்ட மனைவி முடிவு செய்துள்ளார். இவர்களுடைய திட்டப்படி மனைவி, கள்ளக்காதலன் சித்தப்பா ஆகியோர் மற்றொரு நபருடன் சேர்ந்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பீரப்பாவை கழுத்தை நிறைத்து கொலை செய்ய முயன்றுள்ளனர். அப்போது அவர் சத்தம் போட்டதால் அருகில் இருந்தவர்கள் உதவிக்கு ஓடிவந்து அவரை மீட்டனர்.

   

உடனே கள்ளக்காதலன் மற்றும் அவரது நண்பர் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்த கணவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மனைவியை கைது செய்து தலைமறைவாக உள்ள இரண்டு பேரை தேடி வருகிறார்கள்.