“வேண்டாம் மாமா, வலிக்குது”…. அலறிய மனைவியை நடுரோட்டில் ஓட ஓட விரட்டி வெட்டிய கணவர்… பகீர் கிளப்பும் தூத்துக்குடி சம்பவம்….!

By Nanthini on மாசி 17, 2026

Spread the love

தூத்துக்குடியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் சிங்கப்பூரில் எலக்ட்ரிசியனாகப் பணியாற்றி வந்தார். கடினமாக உழைத்து அவர் தனது மனைவி சந்தனமாரியம்மாளுக்கு லட்சக்கணக்கான ரூபாய் பணத்தையும், நகைகளையும் அனுப்பி வைத்துள்ளார். ஆனால், அந்தப் பணத்தை அவர் முறையாகப் பராமரிக்கவில்லை என்றும், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்வதிலேயே அதிக ஆர்வம் காட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், சமூக வலைதளங்கள் மூலம் பல்வேறு ஆண்களுடன் அவருக்கு ஏற்பட்ட நட்புறவு, தம்பதியினரிடையே தீராத மனக்கசப்பை உண்டாக்கியது.

இதனால் சிங்கப்பூரிலிருந்து ஊர் திரும்பிய பாலமுருகன், தான் அனுப்பிய பணம் மற்றும் நகைகள் குறித்து கணக்கு கேட்டபோது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, கடந்த ஆறு மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதற்கிடையில், குடும்பப் பகை மேலும் முற்றிய நிலையில், சந்தனமாரியம்மாளின் தம்பி, பாலமுருகனின் தாய்மாமனான காளிமுத்துவை அரிவாளால் வெட்டியுள்ளார். இந்தச் சம்பவம் பாலமுருகனை கடும் ஆத்திரமடையச் செய்ததுடன், பழிவாங்கத் தூண்டும் காரணியாகவும் அமைந்தது.

   

சம்பவத்தன்று மாலை, தூத்துக்குடி கணேஷ் நகர் பகுதியில் சந்தனமாரியம்மாள் தனது ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தார். அப்போது பாலமுருகனும், காளிமுத்துவும் அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டத் தொடங்கினர். உயிருக்கு பயந்து ஓடிய சந்தனமாரியம்மாளை விடாமல் துரத்திச் சென்று வெட்டியுள்ளனர். “வேண்டாம் மாமா, வலிக்குது” என்று அவர் கதறியும், ஆத்திரம் கண்ணை மறைத்த பாலமுருகன் அவரைத் துடிதுடிக்கக் கொலை செய்தார். பொதுமக்களின் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களை உறைய வைத்துள்ளது.

   

இந்தக் கொடூரச் செயலைச் செய்த பின், பாலமுருகன் மற்றும் காளிமுத்து ஆகிய இருவரும் தென்பாகம் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். கொலையின் போது காயம் அடைந்த பாலமுருகன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். “குடும்ப மானம் போனதற்கும், தாய்மாமன் தாக்கப்பட்டதற்கும் பழிவாங்கவே இதைக் செய்தேன்” என்று பாலமுருகன் வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தெரிகிறது. ஒரு குழந்தையுள்ள நிலையில், குடும்பத் தகராறு கொலையில் முடிந்திருப்பது தூத்துக்குடியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.