“மது வேணும்னு கேட்டது குத்தமா?”…. அக்கா கொடுத்த அந்த ஒரு ஐடியா…. மனைவியை கொன்றுவிட்டு போதையில் பக்கத்திலேயே தூங்கிய கணவன்…. பெருங்குடியில் நடந்த கொடூரம்….!

By Nanthini on ஐப்பசி 7, 2026

Spread the love

சென்னை பெருங்குடி கல்லுக்குட்டை அம்பேத்கர் புரட்சி நகரைச் சேர்ந்த 35 வயதுடைய லோகநாதன் என்பவர், ஆன்லைன் டெலிவரி நிறுவனமான ‘செப்டோ’வில் டெலிவரி ஊழியராகப் பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி சுதா (28). திருமண ஆகி 10 ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லாத நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக இங்கு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். கணவன், மனைவி இருவருக்குமே மது அருந்தும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி இரவு கணவன்-மனைவி இருவரும் வீட்டில் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது சுதா மேலும் மது வேண்டும் எனக் கேட்கவே, இருவருக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த லோகநாதன், இரவு 9 மணியளவில் சுதாவின் துப்பட்டாவால் அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் மனைவி இறந்ததை உணராமல், போதையில் லோகநாதன் அங்கேயே தூங்கியுள்ளார்.

   

நள்ளிரவு 2.30 மணியளவில் விழித்தெழுந்த லோகநாதன் மனைவியை எழுப்ப முயன்றபோது, அவர் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து மறுநாள் காலை வீட்டைப் பூட்டிவிட்டு வெளியேறிய அவர், தன் அக்காவிடம் நடந்தவற்றைக் கூறியுள்ளார். அவரது அறிவுறுத்தலின்பேரில் வழக்கறிஞர் ஒருவரை அணுகிய லோகநாதன், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

   

தகவலறிந்த துரைப்பாக்கம் சட்டம்-ஒழுங்கு ஆய்வாளர் விமல்ராஜ் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று சுதாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், லோகநாதனுக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், அதை சுதா தட்டிக்கேட்டதால் ஏற்பட்ட தகராறிலேயே இக்கொலை நடந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.