கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டம் முத்தேபிகால் தாலுகா ரூடகி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேஷ் பசப்பா (27). இவருக்கு அக்சதா என்பவருடன் ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், கடந்த அக்டோபர் 21-ம் தேதி காலை தனது வீட்டுக்குள் கணேஷ் பசப்பா கழுத்து அறுபட்டு ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் கிடந்தார்.
கணேஷ் தூங்கிக் கொண்டிருந்தபோது கள்ளக்காதலனுடன் சேர்ந்து அக்சதா இந்தக் கொடூரக் கொலையை அரங்கேற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது. அக்சதா தினமும் ஒருவருடன் பேசி வந்ததை கணேஷ் கண்டித்ததால், ஆத்திரமடைந்த அவர் தனது காதலனுடன் சேர்ந்து இக்கொலையைச் செய்துவிட்டுத் தப்பியோடியுள்ளார். இதுகுறித்து உயிரிழந்தவரின் சகோதரர் சுரேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள அக்சதா மற்றும் அவரது காதலனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
