செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த பீர்க்கன்காரணை பகுதியைச் சேர்ந்தவர் தாமோதரன். இவருக்கும் இவரது மனைவி வசந்தாவிற்கும் இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இவர்களது மகன் தந்தை தாமோதரனுடன் வசித்து வந்த நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன்பு மகனை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு வசந்தா கேட்டுள்ளார். ஆனால், அதற்கு தாமோதரன் கடுமையான மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த வசந்தா, தனது கணவரை பழிவாங்க திட்டமிட்டார். இதற்காக ஒரு கூலிப்படையை அணுகிய அவர், சுமார் 3.5 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து தனது கணவரின் காலை உடைக்குமாறு கூறியுள்ளார். அந்த கூலிப்படை கும்பல், திட்டமிட்டபடி தாமோதரனை வழிமறித்துத் தாக்கி அவரது காலை உடைத்துவிட்டு தப்பியோடியது.
இச்சம்பவம் குறித்து படுகாயமடைந்த தாமோதரன் அளித்த புகாரின் பேரில், பீர்க்கன்காரணை போலீசார் தீவிர வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மனைவியே கூலிப்படையை ஏவி கணவனின் காலை உடைத்தது அம்பலமானது. இதைத்தொடர்ந்து, தலைமறைவாக இருந்த மனைவி வசந்தாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இதில் தொடர்புடைய கூலிப்படையினரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வாவில், ஒரு வயதுக் குழந்தை எல்.இ.டி விளக்கு பொருத்தப்பட்ட ராக்கியுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு பயங்கரமான…
உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில், 70 வயது முதியவர் ஒருவருக்கு நேர்ந்த கொடூரமான மற்றும் அத்துமீறிய அநீதி பெரும்…
ஆளுநர் என்பவர் வெறும் மேலாளர் போன்றவர் தான்; ஆளுநரே தேவையில்லை என்பது தான் எங்களின் கொள்கை முடிவே" எனப் பேசியிருந்த…
தமிழகச் சட்டப்பேரவை விவாதத்தின்போது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பேசியதற்கு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக முதன்மைச் செயலாளருமான உதயநிதி…
தமிழகச் சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஆற்றிய உரைக்கு, திமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய…
தமிழக வெற்றிக் கழக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தந்தது தாங்கள் சுயமாக எடுத்த முடிவு என்றும், இதில் எந்தவிதக்…