காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள தளவராம்பூண்டி ஊராட்சி ஒன்றியப் பள்ளி வகுப்பறைக்குள், தமிழக வெற்றிக் கழகத்தின் ஒன்றிய செயலாளர் ராஜேஷ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அனுமதியின்றி நுழைந்துள்ளனர். அங்கு அவர்கள் தவெக தலைவர் விஜய்யின் புகைப்படத்தை வகுப்பறையில் எங்கு மாட்டுவது என்று ஆலோசனை செய்ததோடு, அதனை வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் ‘ரீல்ஸ்’ ஆக வெளியிட்டுள்ளனர்.
அரசுப் பள்ளி வகுப்பறையை அரசியல் காரணங்களுக்காகப் பயன்படுத்திய இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவி, பெரும் சர்ச்சையையும் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. பள்ளி வளாகத்திற்குள் அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்ட ராஜேஷின் இந்த நடவடிக்கைக்குப் பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன.
இதனைத் தொடர்ந்து, கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், தவெக-விற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதாகக் கூறி, உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர் ராஜேஷை கட்சியில் இருந்து நீக்கி தவெக தலைமை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், கட்சியின் தொண்டர்கள் யாரும் இதுபோன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அபிஷேகம், சண்முகார்ச்சனை, தங்கத்தேர் உலா உள்ளிட்ட முக்கியக் கட்டண சேவைகளின் விலையை பெருமளவில் உயர்த்த…
மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையின் நியூ பன்வெல் பகுதியில், சொந்த வீட்டிலேயே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நரக வேதனையை…
கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயது மகனைப் பெற்ற தாயும் அவரது கள்ளக்காதலனும் கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம்…
தமிழகச் சட்டமன்றப் பேரவையில் இன்று நடைபெற்ற ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, முன்னெப்போதும் இல்லாத வகையில்…
தமிழ் ஊடக உலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்த மூத்த பத்திரிகையாளரும், பல இளம் ஊடகவியலாளர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாகவும் ஆசானாகவும்…
தமிழக அரசியலில் எப்போதுமே குடும்ப பின்னணி சார்ந்த விமர்சனங்கள் காரசாரமான விவாதங்களை கிளப்பும் நிலையில், தற்போதைய முதல்வர் விஜய் மற்றும்…