“கண்மாய் கரைக்கு வந்த எமன்”… போதையில் இருந்த கணவருக்கு மனைவி கொடுத்த ‘பயங்கர’ அதிர்ச்சி…. மறுநாள் காலை ஊரே அதிர்ந்த காட்சி…!

By Nanthini on வைகாசி 4, 2026

Spread the love

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வெள்ளைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பந்தல் தொழிலாளி சரவணப்பெருமாள் (47). இவரது மனைவி தில்லையம்மாள் (43) அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அதே மில்லில் வேலை செய்த ஸ்ரீரங்கம் (45) என்பவருடன் தில்லையம்மாளுக்கு பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த விவகாரம் கணவர் சரவணப்பெருமாளுக்கு தெரியவரவே, அவர் தனது மனைவியை கடுமையாக கண்டித்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

தங்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவரைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்த தில்லையம்மாள், தனது காதலன் ஸ்ரீரங்கத்துடன் இணைந்து ஒரு கொலைத் திட்டத்தைத் தீட்டினார். அதன்படி, மதுபோதையில் இருந்த கணவரிடம் நைசாகப் பேசி, அருப்புக்கோட்டை காந்திநகர் புறவழிச்சாலை பகுதியில் உள்ள பாப்பன்குளம் கண்மாய் பகுதிக்கு தில்லையம்மாள் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே மறைந்திருந்த கள்ளக்காதலன் ஸ்ரீரங்கத்துடன் சேர்ந்து, சரவணப்பெருமாளை கண்மாய் நீரில் மூழ்கடித்து இருவரும் கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

   

கொலைக்குப் பிறகு ஏதுமறியாதது போல் இருவரும் தத்தமது வீட்டிற்குச் சென்றுவிட, மறுநாள் காலையில் கண்மாயில் சடலம் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சரவணப்பெருமாளின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சந்தேகத்தின் அடிப்படையில் மனைவி தில்லையம்மாளிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

   

ஆரம்பத்தில் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்த தில்லையம்மாள், போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, தில்லையம்மாள் மற்றும் ஸ்ரீரங்கம் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கள்ளக்காதல் விவகாரத்தில் தாலி கட்டிய கணவனையே மனைவியே திட்டமிட்டு கொலை செய்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.