சினிமாவை மிஞ்சிய கொடூரம்…. மனைவியைக் கொலை செய்து சாம்பலை கிணற்றில் கரைத்த கணவன்…. பகீர் வாக்குமூலம்….!

Spread the love

மதுரை மாவட்டம் மேலூர் அருகே, பிரிந்து வாழ்ந்த மனைவியை மீண்டும் சேர்ந்து வாழலாம் என ஆசைவார்த்தை கூறி அழைத்துச் சென்று, கொடூரமான முறையில் கொலை செய்து உடலை எரித்த கணவனின் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொட்டக்குடி கிராமத்தைச் சேர்ந்த 30 வயதுடைய பிரபாகரன் என்பவருக்கும், கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய கார்த்திகா என்ற பெண்ணுக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, 3 வயதில் தேஜாஸ்ரீ என்ற பெண் குழந்தையும் உள்ளது. ஆனால், தம்பதியினரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த ஓராண்டாக கார்த்திகா தனது குழந்தையுடன் தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த ஜூலை 3-ஆம் தேதி கார்த்திகாவின் தாய் வீட்டிற்குச் சென்ற பிரபாகரன், பழைய பிரச்சினைகளை மறந்துவிட்டு மீண்டும் இணைந்து வாழலாம் எனச் சமாதானம் பேசியுள்ளார். இதனை நம்பி கார்த்திகாவும் கணவனுடன் அவரது சொந்த ஊரான கொட்டக்குடிக்குச் சென்றுள்ளார். ஆனால், அங்கு சென்ற பிறகு கார்த்திகா தனது தாயாருடன் போனில் பேசவில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் அவரைத் தொடர்பு கொள்ள முயன்றும் எந்தத் தகவலும் கிடைக்காததால், கார்த்திகாவின் கதி என்னவென்று தெரியாமல் தவித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், பிரபாகரன் கொட்டக்குடி கிராம நிர்வாக அலுவலர் செல்வத்திடம் நேரில் சென்று ஒரு அதிர்ச்சிகரமான வாக்குமூலத்தை அளித்துள்ளார். அதில், தனது மனைவி கார்த்திகாவை வயல்வெளியில் வைத்துக் கொலை செய்ததாகவும், பின்னர் உடலை எரித்து சாம்பலாக்கி அருகிலிருந்த கிணற்றில் கரைத்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கிராம நிர்வாக அலுவலர் உடனடியாக மேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பிரபாகரனைக் கைது செய்து தீவிர விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர்.

பிரபாகரன் அளித்த தகவலின் பேரில், போலீசார் தடயவியல் நிபுணர்களுடன் இணைந்து குற்றச்சம்பவம் நடந்த வயல்வெளி மற்றும் கிணற்றுப் பகுதிகளில் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். உடல் எரிக்கப்பட்டதாகக் கூறப்படும் இடத்தில் இருந்து சாம்பல் உள்ளிட்ட முக்கிய தடயங்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. ஏற்கனவே கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள பிரபாகரனுக்கு உதவியாக இருந்ததாக, அவரது நண்பர்களான சாந்தகுமார் மற்றும் கரண் ஆகிய இருவரையும் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்தத் திட்டமிட்ட கொடூரக் கொலைக்கான உண்மையான பின்னணி என்ன என்பது குறித்துப் பல்வேறு கோணங்களில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

Nanthini

Share
Published by
Nanthini

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

2 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

2 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

3 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

3 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

4 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

4 மணத்தியாலங்கள் ago