அதிமுக டூ தவெக… இரண்டு விஜயபாஸ்கர்களுக்கு கொடுத்த ரகசிய அசைன்மென்ட்… மண்டல பொறுப்பையே தூக்கி கொடுக்கும் விஜய்… எடப்பாடிக்கு விழுந்த மரண அடி….!

Spread the love

திமுக, அதிமுகவின் 50 ஆண்டுகால திராவிட ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, தமிழகத்தில் புதிய அரசியல் சகாப்தத்தை படைத்துள்ளது நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக்கழகம்’. கடந்த 2024-ல் தொடங்கப்பட்ட இக்கட்சி, அண்மையில் நடந்த சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்து இந்தியாவையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தவெகவின் இந்த அசுர வளர்ச்சியால் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் தவெகவை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக, அதிமுக சார்பில் வெற்றி பெற்ற 47 எம்.எல்.ஏ-க்களில் 25 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அரசியல் அதிரடிகளின் தொடர்ச்சியாக, எடப்பாடி பழனிசாமிக்கு தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில் 6 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் அடுத்தடுத்து பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனர். இதில் முக்கியப் புள்ளிகளாகக் கருதப்படுபவர்கள் முன்னாள் அமைச்சர்களான சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆவர். அதிமுகவில் மாவட்டச் செயலாளர் பொறுப்புகள் பறிக்கப்பட்ட அதிருப்தியில் இருந்த இவர்கள் இருவரும், விரைவில் வரவிருக்கும் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்று தவெக அமைச்சரவையில் இடம் பிடிக்கத் திட்டமிட்டுள்ளனர். அத்தோடு, தங்களுக்கு முறையே புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டச் செயலாளர் பதவிகளையும் வழங்க வேண்டும் என தவெக தலைமையிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

இருப்பினும், கரூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை ஏற்கனவே தவெகவின் மேற்கு மாவட்டச் செயலாளராக மதியழகன் செயல்பட்டு வருகிறார். கடந்த ஆண்டு தவெக மாநாட்டில் ஏற்பட்ட அசம்பாவிதத்தில் 41 பேர் உயிரிழந்த வழக்கில் மதியழகன் சிறை சென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில், புதிதாக இணைந்துள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு மாவட்டச் செயலாளர் பதவி தருவதற்கு உள்ளூர் தவெகவினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதன் காரணமாக, அவருக்கு மாவட்டப் பொறுப்புக்குக் பதிலாக கரூர், நாமக்கல், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களை ஒருங்கிணைக்கும் ‘மண்டல பொறுப்பாளர்’ பதவியை வழங்க தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேபோல, விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ள சி. விஜயபாஸ்கரும் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் பதவியைக் குறிவைத்துள்ளார். ஆனால், புதுக்கோட்டையில் விஜய் ரசிகர் மன்றக் காலம் தொட்டே விஜய்யுடன் பயணித்து வரும் தற்போதைய அமைச்சர் பர்வேஷ் இருப்பதால், அங்கு விஜயபாஸ்கருக்கு மாவட்டப் பொறுப்பு கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, சமரச முயற்சியாக சி. விஜயபாஸ்கருக்கு டெல்டா மாவட்டங்களை ஒருங்கிணைக்கும் மண்டலப் பொறுப்பை வழங்க விஜய் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த முக்கிய நிர்வாகிகளுக்கான இந்த புதிய பதவி அறிவிப்புகள் இன்னும் சில வாரங்களில் தவெக தலைமைகளிடமிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Nanthini

Share
Published by
Nanthini

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

2 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

2 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

3 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

3 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

4 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

4 மணத்தியாலங்கள் ago