வீட்டு வேலை செய்ய மாட்டியா..? கத்தியால் ஒரே குத்து… ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்த கணவர்… மனைவி கைது…!!

By Soundarya on ஐப்பசி 25, 2025

Spread the love

அமெரிக்கா கரோலினா மாகாணம் சார்லட் நகரில் வசித்து வருபவர்கள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அரவிந்த் (49), அவரது மனைவி சந்திரபிரபா சிங் (44). இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி, வீட்டை சுத்தம் செய்யாதது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் வாக்குவாதம் முற்றவே இந்திய வம்சாவளிப் பெண் சந்திரபிரபா சிங் தனது கணவரை கத்தியால் தாக்கியுள்ளார்.

இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து கணவரை கத்தியால் தாக்கிய மனைவி கைது செய்யப்பட்டார். இதுகுறித்த போலீஸ் விசாரணையில், தெரியாமல் கழுத்தில் பட்டதாக மனைவி கூறியுள்ளார்.