உத்தரப்பிரதேசம், ஆக்ராவின் சிகந்தரா பகுதியில் குடும்ப வன்முறையின் உச்சக்கட்டமாக, கணவரைக் கொலை செய்து குளியலறையிலேயே புதைத்த மனைவியின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுரேந்திரா என்ற நபர் கடந்த மே மாதம் திடீரென காணாமல் போனதாக, அவரது மனைவி ரூபி போலீஸில் புகாரளித்தார். இது தொடர்பாக 40 நாட்களுக்கும் மேலாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையின் ஒரு பகுதியாக போலீஸார் ரூபியின் வீட்டிற்குச் சென்றபோது, அவர் மிகுந்த பதற்றத்துடன் காணப்பட்டதோடு, முன்னுக்குப் பின் முரணான பதில்களையும் அளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீஸார் அவரிடம் நடத்திய தீவிரம் காட்டியதில், கணவரைக் கொலை செய்த உண்மையை அவர் ஒப்புக்கொண்டார்.
ரூபி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், போலீஸார் தொழிலாளர்களின் உதவியுடன் அந்த வீட்டின் குளியலறையில் புதிதாகப் பூசப்பட்டிருந்த சிமெண்ட் காரையை உடைத்து சோதனையிட்டனர். அப்போது, குளியலறைத் தரையின் அடியில் புதைக்கப்பட்டிருந்த சுரேந்திராவின் அழுகிய உடல் மீட்கப்பட்டது. அக்கம் பக்கத்தினருக்குச் சந்தேகம் வராமலும், அழுகிய உடலின் வாசனை வெளியில் தெரியாமல் இருக்கவும் ரூபி இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். கணவர் காணாமல் போனது முதல், தான் மிகவும் சோகமாக இருப்பது போல் அக்கம் பக்கத்தினரிடம் அழுது நாடகமாடி வந்த ரூபியின் உண்மை முகம், சுரேந்திராவின் குடும்பத்தினரின் சந்தேகத்தாலும், போலீஸாரின் சாதுரியத்தாலும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்தக் கொடூரக் கொலைக்குக் பின்னணியில் உள்ள காரணங்களை போலீஸார் விவரித்துள்ளனர். சுரேந்திரா வேலையில்லாமல் இருந்ததோடு, மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் மனைவி ரூபியைத் கொடூரமாகத் தாக்கி குடும்ப வன்முறையில் ஈடுபட்டு வந்துள்ளார். அந்த குடும்பம் சுரேந்திராவின் தாயாரின் ஓய்வூதியத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து வந்துள்ளது. சம்பவத்தன்று கணவர் தன்னை மிகக் கொடூரமாகத் தாக்கியதால், இனி பொறுக்க முடியாது என்றெண்ணி ரூபி அவரைக் கொல்லத் திட்டமிட்டுள்ளார். அதன்படி, தனது இரண்டு மகள்களையும் மைத்துனர் வீட்டிற்கு அனுப்பிவிட்டு, சுரேந்திராவுக்குத் தூக்க மாத்திரை கலந்த பாயசத்தைக் கொடுத்துள்ளார். அவர் மயங்கிய பிறகு, கழுத்தை நெரித்துக் கொலை செய்து குளியலறையிலேயே புதைத்துள்ளார்.
இப்பாதகச் செயலில் ரூபி முதன்மைக் குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டுள்ள போதிலும், குளியலறையில் ஆழமான குழி தோண்டுவது, சிமெண்ட் பூசுவது போன்ற வேலைகளை ஒரு பெண்ணால் தனியாகச் செய்வது கடினம் என்பதால், இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் ஆக்ரா போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதற்காக அப்பகுதியின் சிசிடிவி காட்சிகள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இந்தச் சம்பவம், கடந்த 2025 பிப்ரவரியில் கணவரைக் கொன்று உடலைத் துண்டு துண்டாக வெட்டி நீல நிற பிளாஸ்டிக் டிரம்முக்குள் (Blue Drum) சிமெண்ட் போட்டு மூடிய முஸ்கான் ராஜ்புத்தின் கொலை வழக்கின் அதிர்ச்சியூட்டும் பின்னணியோடு பல ஒத்த தன்மைகளைக் கொண்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
திமுகவின் மூத்த தலைவரும் எம்பியுமான ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த், அமைச்சர் என்.ஆனந்த் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளது…
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் (பொறுப்பு) ராஜேந்திர அர்லேகரை…
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் என்றாலே உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மட்டுமின்றி, பல்வேறு துறை பிரபலங்களும் நேரில் சென்று…
திருச்சி கிழக்கு தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் போட்டியிடப் போவதாக எழுந்த வதந்திகளுக்கு அவரே முற்றுப்புள்ளி…
தமிழகத்தில் நடிகர் விஜய் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற முதலாவது அமைச்சரவைக் கூட்டம் பெரும்…
சின்னத்திரை மற்றும் சினிமா உலகில் சமீப காலமாக இளம் வயது பிரபலங்களின் மரணங்கள் தொடர்கதையாகி வருவது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை…