நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீதர் என்பவருக்கு அதே பகுதியை சேர்ந்த பரிமளா என்ற பெண்ணுடன் கலந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவரும் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள காசி பிள்ளை பகுதியில் வீடு எடுத்து வசித்து வருகின்றனர். ஸ்ரீதர் அதே பகுதியில் உள்ள உணவகத்தில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வரும் நிலையில் இவருடைய மனைவி பரிமளா வீட்டின் அருகில் சொந்தமாக இ சேவை மையம் வைத்து நடத்தி வருகின்றார். ஸ்ரீதருக்கு அவர் வேலை செய்யும் உணவகத்திற்கு அடிக்கடி உணவருந்த வரும் பெருந்துறையை சேர்ந்த ஓட்டுநர் கார்த்திகேயன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிறகு இருவரும் நெருங்கி நண்பர்களாக பழகிய நிலையில் கார்த்திகேயன் அடிக்கடி ஸ்ரீதர் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார்.
இதனால் பரிமளா உடன் பழக்கம் ஏற்பட்டு அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனைப் தொடர்ந்து இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்து வந்துள்ளன. பரிமளாவின் கணவர் ஸ்ரீதருக்கு குடிப்பழக்கம் உள்ள நிலையில் அடிக்கடி கார்த்திகேயன் மற்றும் ஸ்ரீதர் இருவரும் சேர்ந்து அவரது வீட்டில் ஒன்றாக அமர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது ஸ்ரீதருக்கு அதிகமாக மது ஊற்றி கொடுத்துவிட்டு கார்த்திகேயன் அவரது வீட்டிலேயே பரிமளா உடன் தனிமையில் இருப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
அதேபோல ஒரு நாள் மது அருந்திவிட்டு பரிமளா உடன் கார்த்திகேயன் தனிமையில் இருந்த நிலையில், அந்த சமயத்தில் போதை தெளிந்த ஸ்ரீதர் இருவரும் தனிமையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். பிறகு இருவரையும் கண்டித்த ஸ்ரீதர் மனைவியை தகாத வார்த்தைகளால் பேசி திட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து மறுநாள் ஸ்ரீதரிடம் மன்னிப்பு கேட்ட கார்த்திகேயன் அவரை மது அருந்த தனியாக அழைத்துச் சென்று கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பிறகு பரிமளாவுக்கு போன் செய்து தகவல் தெரிவித்து சாக்கு மூட்டை எடுத்து வரக்கூடிய உள்ளார்.
இதனைத் தொடர்ந்து இருவரும் ஸ்ரீதரின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி அங்குள்ள கால்வாயில் வீசிவிட்டனர். சாக்கு முட்டையில் இருந்தே துர்நாற்றம் வீசுவதை அறிந்த அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சாக்கு மூட்டையை திறந்து பார்த்தபோது ஸ்ரீதர் சடலத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பிறகு இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை மனைவியை கள்ளக்காதலுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. தற்போது இருவரையும் கைது செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
