தினமும் டார்ச்சர் செய்த கணவன்… இரும்பு கம்பியால் ஒரே போடாய் போட்ட மனைவி… மகள் கண்முன்னே துடிதுடித்து உயிரிழந்த தந்தை…!

Spread the love

மதுரை மாவட்டம் திருநகர் பகுதியில் உள்ள பெரியார் தெருவில் பாண்டியராஜன் (40) என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 30 வயதுடைய விஜயலட்சுமி என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ள நிலையில் பாண்டியராஜன் வீட்டுக்கு அருகில் உள்ள கோவில் பள்ளத்தில் பூ மற்றும் பழக்கடை வைத்து நடத்தி வருகின்றார். பாண்டியராஜன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் கடையை முடித்துவிட்டு தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை மாலையில் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த பாண்டியராஜன் வீட்டிலிருந்த மனைவி விஜயலட்சுமி உடன் வாக்குவாதம் செய்து தகராறு ஈடுபட்டுள்ளார். இதில் ஒரு கட்டத்தில் பாண்டியராஜன் தன்னுடைய மனைவியை அடித்து கீழே தள்ளி விட்டதால் ஆத்திரமடைந்த விஜயலட்சுமி கீழே இருந்த இரும்பு கம்பியை எடுத்து கணவனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த பாண்டியராஜன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

இதனைப் பார்த்து அக்கம் பக்கத்தினர் உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பாண்டியராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் விஜயலட்சுமியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர். மது போதையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறியில் கணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Nanthini

Recent Posts

“யமராஜனின் மருமகன் வந்துட்டான்!”.. பழைய இரும்பில் உருவான எலும்புக்கூடு பைக்.. நெட்டிசன்கள் மிரண்ட வீடியோ..!!!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் (@wbjit64) என்ற பைக் வோல்கர், தனது அபாரமான 'தேசி ஜுகாட்' (Desi…

2 மணத்தியாலங்கள் ago

BREAKING: பயிர்க்கடன் தள்ளுபடி.. CM விஜய் அறிவித்தார்..!!!

தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,…

2 மணத்தியாலங்கள் ago

“காய்ச்சல் வர்றதுக்கு முன்னாடி லீவ் லெட்டர் கொடு!”… முதலாளியின் விசித்திர ரூல்.. பாஸை வறுத்தெடுத்த பெண் ஊழியர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

பெருநிறுவன வாழ்க்கையில் (Corporate life) நிலவும் விசித்திரமான மற்றும் நியாயமற்ற விதிமுறைகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான…

2 மணத்தியாலங்கள் ago

“அனாதை பெண்களுக்கு மாப்பிள்ளை தேவை…” ஒரே ஒரு அறிவிப்பு, ஓடிவந்த 40 மணமகன்கள்… திருமண மேடையில் காத்திருந்த அந்த ‘ட்விஸ்ட்’.. மத்தியபிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!!

மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…

3 மணத்தியாலங்கள் ago

சல்லி சல்லியாய் உடைந்த அதிமுக.. விஜய் போட்ட ‘ஸ்கெட்ச்’.. இபிஎஸ்-க்கு விழுந்த பலத்த அடி.. அதிமுகவில் இருந்து தவெக-விற்கு இணைந்த 3 எம்.எல்.ஏ-க்கள்…!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…

3 மணத்தியாலங்கள் ago

விவசாயிகளே அலர்ட்..! PM கிசான் 23-வது தவணை எப்போது..? அரசின் ரூ.2000 பெற உடனே செய்ய வேண்டிய இ-கேஒய்சி பணிகள்..!!

மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…

3 மணத்தியாலங்கள் ago