காதலுக்கு தடையாக இருந்த கணவன்.. இன்ஸ்டா கள்ளக்காதலனுடன் மனைவி போட்ட ஸ்கெட்ச்.. நெஞ்சை பதறவைக்கும் கொலை சம்பவம்..!!

Spread the love

தலைநகர் ஜெய்ப்பூரின் திரிவேணி நகர் சிறுபாலத்தின் கீழ் வாலிபர் ஒருவர் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மனைவியையும் அவளது கள்ளக்காதலனையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மகேஷ் ஜடாவ் என்ற தொழிலாளி, தனது மனைவி ஆர்த்திக்கும் மோனு சௌத்ரி என்பவனுக்கும் இருந்த கள்ள உறவைக் கண்டுபிடித்து எச்சரித்துள்ளார். தங்களின் காதலுக்குத் தடையாக இருந்த கணவனைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்த ஆர்த்தி, தனது காதலன் மோனுவிடம் வெறும் 1200 ரூபாய் பணம் கொடுத்துக் கொலை செய்யத் தூண்டியுள்ளார். இதற்காக மகேஷுடன் நயவஞ்சகமாக நட்பு பாராட்டிய மோனு, கடந்த ஜூன் 11 அன்று அவரை மது குடிக்க அழைத்துச் சென்று, அதிகப்படியாக மதுவைக் கொடுத்து ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கூர்மையான ஆயுதத்தால் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

கொலை முடிந்ததும் இன்ஸ்டாகிராம் அழைப்பு மூலம் ஆர்த்தியிடம் “வேலை முடிந்தது” எனத் தெரிவித்துவிட்டு மோனு தப்பியோடியுள்ளார். இந்த கொடூரக் கொலை குறித்து விசாரணையில் இறங்கிய காவல் ஆய்வாளர் மகேந்திர சிங் தலைமையிலான தனிப்படை, அப்பகுதியில் இருந்த 500-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை அக்குவேறு ஆணிவேறாக ஆய்வு செய்தது. போலீசாரிடம் சிக்காமல் இருக்கத் தனது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டே மத்தியப் பிரதேசத்திற்குத் தப்ப முயன்ற கொலையாளி மோனுவை, போலீசார் சுமார் 50 கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்று ரிங் ரோடு பகுதியில் மடக்கிப் பிடித்தனர். கைதான கள்ளக்காதலர்கள் இருவரிடமும் போலீசார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Muthu Mani

Recent Posts

அடப்பாவி… நீயெல்லாம் மனுஷனா?… நகைக் பேராசையால் மனைவியை… கழுத்து நெரித்துக் கொன்று… கணவன் ஆடிய பயங்கர நாடகம்… கர்நாடகாவை உலுக்கிய சம்பவம்…!!

கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் சிஞ்சோளியைச் சேர்ந்த 32 வயதான அர்ச்சனா என்ற பெண், குடும்பத் தகராறு காரணமாக அவரது…

11 minutes ago

திக் திக்… பெட்ரோல் பங்கிற்கு சீல் வைக்க சென்ற… இந்தியன் ஆயில் மேலாளர் கொடூரமாக அடித்துக் கொலை… குலை நடுங்கவைக்கும் சம்பவம்…!

இந்திய பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் மேலாளர் மகேஷ் ஷெல்கே, மகாராஷ்டிர மாநிலம் ஹிங்கோலி மாவட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாகக்…

25 minutes ago

“117 எம்.எல்.ஏ-க்கள் கணக்கு”…. மெஜாரிட்டிக்கு போட்ட பிளான்… கசிந்த தவெக மேலிட ரகசியம்…. கடைசி நேரத்தில் மாறிய ட்விஸ்ட்….!

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இரண்டு தொகுதிகளின் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து ஆளும்கட்சியான…

53 minutes ago

தவெக ஆட்சிக்கு திடீர் ஆபத்து?சத்தமே இல்லாம தூக்க பிளான்…. திருமாவளவன் போட்ட போடு…. உளவுத்துறை அறிக்கையால் அதிர்ச்சியில் முதல்வர் விஜய்….!

தமிழகத்தில் தமிழக வெற்றி கழகத் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருவதாகவும், அந்த ஆட்சியை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் தீவிரமாக ரகசியத் திட்டம்…

1 மணத்தியாலம் ago

பெட்ரோல் ஊற்றி கொடூரம்… சிகிச்சை பலனின்றி உயிரிழந்த ராஜேஸ்வரி…. 16 நாள் போராட்டம் வீண்… பொன்னேரி அரசு மருத்துவமனை கொடூரம்….!

பொன்னேரி அரசு மருத்துவமனையில் தற்காலிகக் கணினி ஆபரேட்டராகப் பணியாற்றி வந்த ராஜேஸ்வரி என்ற பெண் ஊழியர் மீது, கடந்த மாதம்…

1 மணத்தியாலம் ago

AI சொன்ன வழியைக் கேட்ட சிறுவன்… ‘சுடுகாட்டுப் பாதை’ மரணப் பள்ளத்தில் நின்ற அதிர்ச்சி சம்பவம்…. இறுதியில் காத்திருந்த பேரதிர்ச்சி…..!

செயற்கை நுண்ணறிவு (AI) சாட்போட்டுகள் நமது அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கமாக மாறிவரும் அதே வேளையில், அவற்றின் தகவல்களைக்…

1 மணத்தியாலம் ago