கிருஷ்ணகிரி அருகே உள்ள கிராமத்தில் கூலி தொழிலாளியான ரங்கசாமி (47) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி கவிதா (44). கடந்த ஜூன் ஒன்பதாம் தேதி இரவு 11 மணி அளவில் வீட்டின் மேல் மாடியில் இருந்த ரங்கசாமியை அவருடைய மனைவி பெற்றோர் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி சென்று விட்டார். இதில் படுகாயம் அடைந்த ரங்கசாமி, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ஜூன் 11ஆம் தேதி உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து ரங்கசாமியின் மனைவி கவிதாவை தேடி வந்தனர். இந்நிலையில் திருப்பதியில் பதுங்கி இருந்து அவரை நேற்று போலீசார் கைது செய்து விசாரணை நடத்திய நிலையில் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதாவது, எனக்கு திருமணம் ஆகி 22 வருடங்கள் ஆகிவிட்டது.
நான் கறவை மாடுகள் வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகின்றேன். எங்களுக்கு வைத்தீஸ்வரி, சாதிகா என்ற மகள்களும் சூர்யா என்ற மகனும் உள்ளார். வைத்தீஸ்வரிக்கு திருமணமாகி கணவர் வீட்டில் உள்ள நிலையில் சாதிகா கிருஷ்ணகிரியில் உள்ள கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார். நாங்கள் சொத்து, பணம் மற்றும் நகைகளுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தோம். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு என்னுடைய கணவர் வேலைக்கு சென்ற இடத்தில் மஞ்சுளா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. அதனை அறிந்து நான் என் கணவரை கண்டித்தேன்.
ஆனாலும் அவர் அந்தப் பெண்ணுடன் பழகுவதை நிறுத்தவில்லை. வீட்டிலிருந்த எம்பது பவுன் நகைகளை கொஞ்சம் கொஞ்சமாக மஞ்சுளாவிற்கு கொடுத்துவிட்டார். மேலும் நிலத்தை விற்று அவரிடம் கொடுத்துவிட்டார். சொந்த வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்த நாங்கள் தற்போது வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். ஒரு கட்டத்தில் என் கணவர் வீட்டுக்கு ஒழுங்காக வரவில்லை. மூன்று மாதத்திற்கு ஒரு முறை தான் வந்தார். அப்போதும் மது குடித்துவிட்டு வந்து என்னுடன் ஆபாசமாக பேசுவது மட்டுமல்ல நீ அழகாக இல்லை அசிங்கமாக இருக்கிறாய் என்றெல்லாம் கூறி என்னை அடித்து துன்புறுத்துவார். என் பிள்ளைகளுக்காக நான் எல்லாத்தையும் பொறுத்துக் கொண்டேன்.
சம்பவம் நடந்த அன்று இரவு குளித்துவிட்டு வீட்டின் மாடிக்கு சென்ற அவர் என்னை அடித்து உதைத்தார். பிறகு போதையில் தூங்கிவிட்டார். கோபத்தில் இருந்த நான் விவசாய நிலத்தில் மருந்துக்கு தெளிக்க வைத்திருந்த பெட்ரோலை எடுத்து அவர் மீது போர்வையை போட்டு அதன் மீது பெட்ரோலை ஊற்றி கட்டையில் துணியை சுற்றி பந்தம் போல செய்தேன். பிறகு அதிர் தீயை கொளுத்தி அவர் மீது வைத்துவிட்டு தப்பி சென்ற தலைமறைவாகி விட்டேன் என போலீசில் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.
