உச்சகட்ட பயங்கரம்…! மசாலா அரைக்கும் குளவி கல்லால் கணவனை அடித்துக் கொன்ற மனைவி…. பரபரப்பு சம்பவம்…!!

By Devi Ramu on ஆவணி 26, 2026

Spread the love

ஆந்திர மாநிலம் அம்பேத்கார் கோனசீமா மாவட்டம் ராமச்சந்திரபுரத்தில் அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த தங்கேடி எல்லாராவ் (46) என்பவருக்கும் அவரது மனைவி தங்கேடி உமாதேவி என்பவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், அவர்களுக்குள் மீண்டும் ஏற்பட்ட மோதலின் போது, ஆத்திரமடைந்த உமாதேவி வீட்டில் இருந்த மசாலா அரைக்கும் குளவிக் கல் உருட்டுக் கட்டையால் கணவன் எல்லாராவைத் தாக்கியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த எல்லாராவ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து வந்த போலீசார் , உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், கொலை வழக்குப் பதிவு செய்து உமாதேவியைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.