இன்றைய உலகத்தின் பார்வையே இந்தியாவை நோக்கி குறிப்பாக தமிழகத்தை நோக்கிதான் இருக்கிறது. ஏனென்றால் தமிழகத்தைச் சேர்ந்த 18 வயதையான குகேஷ் வேர்ல்ட் செஸ் சாம்பியன் ஆக ஆகியிருக்கிறார். சிறுவயதிலிருந்தே பல்வேறு போட்டிகளில் சாதித்து வந்த குகேஷ் தற்போது வேர்ல்ட் சாம்பியன் பட்டம் பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார். இந்நிலையில் சாம்பியன் குகேஷுக்கு ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இது ஏன் என்பதை பற்றி இனி காண்போம்.

செஸ் வீரரான குகேஷுக்கு கடந்த நவம்பர் 27ஆம் தேதி ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது. அது நெகட்டிவ் என்று தான் ரிசல்ட் வந்திருக்கிறது. பொதுவாக தடகளம் போன்ற உடல் சம்பந்தமான விளையாட்டுப் போட்டிகளுக்கு தான் ஊக்க மருந்து சோதனைகள் நடத்துவார்கள். ஆனால் செஸ் போன்ற அறிவுத்திறனை பயன்படுத்தி விளையாடும் போட்டிகளில் ஏன் இந்த ஊக்க மருந்து சோதனை நடத்தப்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா?
விளையாட்டில் பங்கேற்கும் வீரர்கள் அவர்களுடைய செயல் திறனை அதிகரிக்க ஊக்க மருந்துகளை உட்கொள்வர். இது விளையாட்டு வீதிகளின் கீழ் குற்றமாக கருதப்படுகிறது. செஸ் விளையாட்டு ஒலிம்பிக்கில் இணைப்பதற்காக 1999 ஆம் ஆண்டு முதல் முறையாக செஸ் விளையாட்டில் ஊக்க மருந்து தடுப்பு செயல்முறை என்பதை சர்வதேச சேஸ் கூட்டமைப்பு FIDE அறிமுகப்படுத்தியது. ஒலிம்பிக்ஸ் ஆணையத்தால் செஸ் அங்கீகரிக்கப்பட்டு இருந்தாலும் இது உடல் சார்ந்த விளையாட்டு இல்லாமல் இருப்பதால் செஸ் ஒலிம்பிக்கில் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டாக அறிவிக்கப்படவில்லை.
இதுவரையிலும் பளு தூக்குதல் தடகளம் போன்ற விளையாட்டு போட்டிகளில் உடலின் வேகம் மற்றும் செயல் திறன் அதிகரிப்பதற்காக ஊக்க மருந்துகள் பயன்படுத்துவார்கள் என்ற கருத்து தான் இருந்து வந்தது. அதனால் தான் ஊக்க மருந்து பரிசோதனை நடத்துவர். ஆனால் செஸ் விளையாட்டுகளிலும் மருந்துகளால் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கவும் கூர்மையாக்கவும் முடியும் என்று கண்டறியப்பட்டு இருக்கிறது. அதனால் தான் செஸ் விளையாட்டிலும் ஊக்க மருந்து சோதனை நடத்தப்படுகிறது.

இப்படி மூளைக்கு வேகம் அளிக்கவும் கூர்மையாக்கவும் பல மணி நேரம் விழிப்புடன் இருக்கச் செய்யும் மொட்டாபினில் என்ற மருந்துகளை கொள்ளும் சாத்திய கூறுகள் இருப்பதாக கண்டுபிடித்திருக்கிறார்கள். அதனால் தான் செஸ் போட்டியில் விளையாடும் போட்டியாளருக்கு ஊக்க மருந்து பரிசோதனை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற முறையை கொண்டு வந்திருக்கிறார்கள். செஸ் விளையாட்டுகளில் ஊக்க மருந்து பரிசோதனை தேவை இல்லை என்று பலர் கருத்துக்கள் கூறி வந்தாலும் இது விளையாட்டு போட்டியின் ஒரு அங்கமாக தான் பார்க்கப்படுகிறது, நடந்து வருகிறது.
