#image_title
இன்றைய காலகட்டத்தில் விவாகராத்து என்பது அதிகமாக நடக்கிறது. குறிப்பாக திரையுலகில் தொடர்ந்து பல பிரபலங்கள் விவாகரத்தை அறிவித்து வருவது சோகமான செய்தியாக தான் இருக்கிறது. இது தவிர பல செய்திகளிலும் விவாகரத்து பற்றி பார்த்திருப்போம். எதற்காக இந்த விவாகரத்து நடக்கிறது இது நல்லதா கெட்டதா பெண்கள் அதிகமாக விவாகரத்தை நாடுவது ஏன் என்பதை பற்றி இனி காண்போம்.
திருமணம் செய்து கொள்ளும்போது ஒவ்வொருவரும் 100 வருடம் ஒன்றாக வாழ வேண்டும் என்று தான் தொடங்குவார்கள். யாரும் விவாகரத்து செய்து பிரிந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் திருமணம் செய்து கொள்வதில்லை. ஆனால் நாட்கள் போகப்போக ஒரு சிலருக்கு புரிதல் ஏற்படுவதை விட முரண்பாடுகள் தான் அதிகமாக ஏற்படுகிறது. இதை சமாளிக்கவே முடியாது என்று தோன்றிய போது தான் இருவருமே பிரிந்து தங்களது பாதையை தனித்தனியாக வகுத்து சென்றுவிட வேண்டும் என்று முடிவு செய்கின்றனர்.
பெண்கள் விவாகரத்தை அதிகமாக நாடுவதற்கு உளவியல் காரணங்களும் இருக்கின்றன. இந்த காலத்தில் பெண்கள் படித்துவிட்டு வேலைக்கு செல்கின்றனர். ஆனால் திருமணத்தின் காரணமாக இடம்பெயர்தல் குழந்தைப்பேறு காரணமாக அவர்கள் சுதந்திரமாக பார்த்துக்கொண்டிருந்த வேலையை விட வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இதனால் அவர்கள் ஒருவித மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள். பெண்கள் ஒருவரை நம்பி திருமணம் செய்து புகுந்த வீட்டிற்கு வரும் போது அங்கு கிடைக்க வேண்டிய சில விஷயங்கள் கிடைக்காமல் போகும்போது அவர்கள் விவாகரத்து என்ற முடிவுக்கு வருகிறார்கள்.
அது மட்டுமில்லாமல் ஆண்கள் வீட்டை விட்டு செல்லும்போது பல நபர்களுடன் பழகுவதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் ஒரு பெண் வீட்டிலேயே இருப்பவள் தன் கணவர் தன்னுடன் அதிக நேரம் செலவிட வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆனால் அதை பல ஆண்கள் செய்வதில்லை. அதனாலேயே அவர்கள் ஏன் நாம் முடங்கி கிடக்க வேண்டும் வெளியே செல்லலாம் சுதந்திரமாக இருக்கலாம் நாம் படித்திருக்கிறோம் நம்மால் நமது வாழ்க்கையை நடத்த முடியும் என்ற நம்பிக்கையில் தான் பெண்கள் அதிகமாக இந்த காலத்தில் தைரியமாக விவாகரத்து முடிவுகள் எடுக்கிறார்கள் என்று ஒரு ஆய்வில் தெரிவிக்கிறார்கள். எதற்கெடுத்தாலும் விவாகரத்து என்பது சரியான முடிவு அல்ல ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் பேசி சரி செய்ய முயற்சிக்க வேண்டும் நன்றாக வாழ்வது தான் குடும்பம் அதுதான் நம் வீட்டிற்கும் சமுதாயத்திற்கும் நல்லது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
சேலம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்தவர் தங்கமணி (50). சங்கர் நகர் பகுதியில் வீடுகளுக்குச் சென்று வீட்டு…
நேற்றைய அன்பின் பிணைப்புகள் இன்று அறுபட்டு, கணவன்-மனைவி மற்றும் குடும்ப உறவுகள் உச்சக்கட்ட மோதலாக மாறியுள்ளன. தூய்மையற்ற ரத்தம் என்ற…
சூரத்தில் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி, ஈகோ வேன் மோதியதில் வாகனத்தின் அடியில் விழுந்தாள். எதிர்பாராத…
பார்ப்பேட்டா பகுதியில் காதலுக்காகத் துணிச்சலான முடிவெடுத்த ஒரு பெண்ணின் கதை தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகக்…
அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நௌகவான் சாதத் காவல் நிலையப் பகுதியில் விசித்திரமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு இளைஞனும்…
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம்…