“என்னால் விஜய்க்கு படம் பண்ண முடியாது… அவரோட அந்த ஒரு கண்டீஷன் எனக்கு செட் ஆகாது” – சுந்தர் சி பகிர்ந்த தகவல்!

By vinoth on மே 4, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 வருடங்களாக கமர்ஷியல் இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. அவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், வின்னர், கிரி, கலகலப்பு என ஏராளமான படங்கள் கமர்ஷியலாக பெருவெற்றி பெற்றுள்ளன. முறைமாமன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சுந்தர் சி காமெடி, கிளாமர், ஆக்‌ஷன் என கலந்து கட்டி மசாலா படமாக எடுத்து முன்னணி இயக்குனர் ஆனார்.

இதற்கிடையில் அவர் தலைநகரம் திரைப்படத்தின் மூலமாக நடிகர் ஆனார். அந்த படம் வெற்றி பெற்றதையடுத்து தொடர்ந்து பல படங்களில் கதாநாயகனாக நடித்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அவர் படங்கள் சரியாக ஓடாத போது மீண்டும் கலகலப்பு படம் மூலமாக இயக்குனர் ஆனார். அதன் பின்னர் நடிப்பு இயக்கம் என இரட்டைக் குதிரைகளில் சவாரி செய்து வருகிறார்.

   

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் ரஜினி, கமல், சரத்க்குமார், அஜித், விஷால், கார்த்திக் என பல முன்னணி நடிகர்களோடு இணைந்து படம் பண்ணியுள்ளார். ஆனால் அவரின் வேவ் லென்த்தில் படம் நடித்துவந்த விஜய்யோடு இணைந்து மட்டும் அவர் ஒரு படம் கூட பண்ணவில்லை.

   

இதுகுறித்து அவரிடம் ஒரு நேர்காணலின் போது கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சுந்தர் சி “விஜய் சார் முழு கதையையும் கேட்டுவிட்டுதான் படம் நடிப்பார். ஆனால் நான் யாரிடமும் கதை சொன்னதில்லை. என்னை நம்பி வரும் ஹீரோக்களை வைத்துதான் நான் படம் பண்ணுகிறேன். அது மட்டுமில்லாமல் எனக்குக் கதையை விலாவாரியாக சொல்லவும் தெரியாது. அதனால்தான் நான் விஜய்யோடு இணைந்து படம் பண்ண முடியாமல் போய்விட்டது” எனக் கூறியிருந்தார்.