#image_title
தமிழ் சினிமாவின் தனிப்பெரும் சாதனையாளர்களில் ஒருவர் இளையராஜா. உலகளவில் அவர் அளவுக்கு அதிக படங்களில் இசையமைத்த இசையமைப்பாளர் இல்லை. இப்போதும் தன்னுடைய 82 ஆவது வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் 1500 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசமே பின்னணி இசையில் இளையராஜாவுக்கு நிகர் அவர் மட்டுமே. அவரின் வருகைக்குப் பிறகே தமிழ் சினிமாவில் பின்னணி இசையை இயக்குனர்கள் உணர ஆரம்பித்தார்கள் என்றால் அது மிகையாகாது.
இளையராஜா 1976ல் அன்னக்கிளியில் அறிமுகம் ஆனார். அடுத்தடுத்த வருடங்களில் தொடர்ச்சியாக சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் ஆனார். அவர் அறிமுகமாமி மூன்றே ஆண்டுகளில் ‘இளையராஜாவின் ரசிகை’ என ஒரு திரைப்படம் எடுக்கப்பட்டது. ஆனால் அந்த படம் கடைசி வரை ரிலீஸ் ஆகவே இல்லை.
அதே போல 90 களில் ‘இளையராஜாவின் மோதிரம்’ என்ற பெயரில் வாலி கதை, திரைக்கதை, வசனம் எழுத வடிவேலு நடிப்பில் ஒரு படம் உருவாக இருந்தது. அந்த படத்தில் இளையராஜா 20 சீன்களுக்கு வருவது போல கதையை எழுதியிருந்தாராம் வாலி. முதலில் அந்த படத்தை இளையராஜாவே தயாரிப்பதாக இருந்துள்ளார்.
#image_title
ஆனால் அதன் பின்னர் ரஜினி அந்த படத்தை தயாரிக்க மிகவும் ஆசைப்பட்டுள்ளார். இயக்குனராக கே எஸ் ரவிக்குமாரையும் ஒப்பந்தம் செய்துள்ளார். அப்போது கே எஸ் ரவிக்குமார் திரைக்கதை என்று தன்னுடைய பெயர்தான் வரவேண்டும் என சொல்லியுள்ளார். வாலியும் அதற்கு ஓகே சொல்லியுள்ளார். ஆனால் வாலி எழுதிய திரைக்கதையை அவர்கள் கேட்டபோது கோபத்தில் கொடுக்க மறுத்துவிட்டாராம்.
திரைக்கதை என்று அவர் பெயரைப் போட்டுக்கொள்ளும்போது “எதற்காக என்னுடைய திரைக்கதையைக் கேட்கிறீர்கள்?” எனக் கோபமாக சொல்லி அனுப்பிவிட்டாராம். இப்படி சில பிரச்சனைகள் எழுந்ததும் கடைசியில் அந்த படமே வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம் இளையராஜா.
தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…
திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…
தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…
திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…