Connect with us

CINEMA

சிவாஜியோடு பல படங்களில் செகண்ட் ஹீரோவாக நடித்த ஜெமினி கணேசன்… வருத்தப்பட்ட எம் ஜி ஆர்- ஏன் தெரியுமா?

தமிழ் சினிமாவில் எம் ஜி ஆர் சிவாஜி என்ற துருவங்கள் ஆட்சி செய்துகொண்டிருந்த நேரத்தில் சைலண்ட்டாக இவர்கள் இருவருக்கும் இணையாக வெற்றி படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் ஜெமினி கணேசன். எம் ஜி ஆர் ஆக்‌ஷன் மற்றும் புராண படங்களில் நடித்தால், சிவாஜி கணேசன் எமோஷனலான குடும்பக் கதைகளில் நடித்து வந்தார். இவற்றுக்கிடையே ஜெமினி கணேசன் மென்மையானக் காதல் கதைகளில் நடித்தார். அதனால்தான் அவர் காதல் மன்னன் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.

இந்நிலையில் ஜெமினி கணேசன் ஈகோ பார்க்காமல் பிற நடிகர்களின் படங்களில் செகண்ட் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படி அவர் சிவாஜியோடு இணைந்து 10 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். ஆனால் எம் ஜி ஆரோடு ஒரே ஒரு படமான முகராசியில் மட்டுமே இணைந்து நடித்தார்.

   
mgr and gemini ganesan

#image_title

எம்ஜிஆர் மற்றும் ஜெமினி கணேசன் இவர்கள் இருவரும் இந்த திரைப்படத்தில் சகோதரர்களாக நடித்திருப்பார்கள். 1966 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியானது. தந்தையைக் கொன்றவரை கொல்ல வேண்டும் என நினைக்கும் கோபக்கார இளைஞராக ஜெமினியும், அவரை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தரவேண்டும் என எம் ஜி ஆரும் போராடுவார்கள்.

எமோஷனலான இந்த கதை நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த படம் பெரிய வெற்றி பெறவில்லை. அதன்பின்னர் எம் ஜி ஆர் தன் படங்களில் ஜெமினி நடிக்க வேண்டும் எனவும் ஆசைப்படவில்லை.

இதற்கு எம் ஜி ஆருக்கு ஜெமினியின் மேல் இருந்த அக்கறைதான் காரணம் என சொல்லப்படுகிறது. நிறைய சிவாஜி கணேசன் படங்களில் செகண்ட் ஹீரோவாக அவர் நடிப்பதை பார்த்து “ஜெமினி தனித்துவமான நடிப்பாற்றல் கொண்டவர். அவர் ஏன் இப்படி செகண்ட் ஹீரோவாக நடித்து தன் மார்க்கெட்டை குறைத்துக் கொள்கிறார்” என தன் நண்பர்களிடம் வருத்தப்பட்டு கூறியுள்ளாராம்.

Continue Reading

More in CINEMA

To Top