“அவர்தான் கூப்பிட்டார், ஆனா…” விஜய் கட்சிக்கு நோ சொன்ன ரகசியத்தை உடைத்த திருமாவளவன்…. தமிழக அரசியலை உலுக்கிய அந்த பதில்….!

By Nanthini on ஆனி 16, 2026

Spread the love

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஏன் இணையவில்லை என்பது குறித்து அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மனம் திறந்து விளக்கமளித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தவெக தரப்பில் இருந்து அருண்ராஜ் என்பவர் தன்னைத் தொடர்புகொண்டு கூட்டணிக்கு அழைப்பு விடுத்ததை உறுதிப்படுத்தினார். எனினும், தற்போதைய அரசியல் சூழலில் இடதுசாரிகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகள் அங்கம் வகிக்கும் திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறினால், அது அந்தக் கூட்டணியின் பலவீனத்திற்கும் வீழ்ச்சிக்கும் வழிவகுத்துவிடும் என்று சுட்டிக்காட்டினார்.

அத்தகையதொரு வரலாற்றுப் பிழைக்கும், திமுக கூட்டணியின் சரிவுக்குத் தானே காரணம் என்ற பழிச்சொல்லுக்கும் ஆளாக விரும்பாததாலேயே, தவெக-வின் அழைப்பை மறுத்து தற்போதைய கூட்டணியிலேயே தொடர முடிவெடுத்ததாக திருமாவளவன் மிகவும் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.