உலகத்தில் பல விளையாட்டு போட்டிகள் நடந்து கொண்டதான் இருக்கின்றது. ஆனால் விளையாட்டுப் போட்டிகளில் உலகத்தில் ஒவ்வொரு அணிகள் மோதும் போதும் அவர்கள் விளையாட்டு மைதானத்திற்கு வந்ததற்கு பிறகு அவரவர் நாட்டின் தேசிய கீதம் ஒலிக்கப்படும். அந்த தேசிய கீதத்தின் போது சிறுவர்கள் விளையாட்டு வீரர்களின் கைகோர்த்து விளையாட்டு மைதானத்திற்கு வந்து அவர்களுடன் சேர்ந்து தேசிய கீதம் பாடுவார்கள். எதற்காக இந்த குழந்தைகள் விளையாட்டு மைதானத்திற்கு வர வைக்கப்படுகிறார்கள் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? அதைப் பற்றி இனி காண்போம்.

விளையாட்டு தொடங்குவதற்கு முன்பு விளையாட்டு வீரர்களுடன் மைதானத்திற்கு வரும் குழந்தைகளை எஸ்காட் அல்லது மஸ்காட் குழந்தைகள் என்று அழைக்கப்படுகிறார்கள். இந்த குழந்தைகள் சமூக சேவை நிறுவனங்கள் மற்றும் குழந்தைகள் காப்பகத்தில் இருந்து வருகிறார்கள். குறிப்பாக ஆதரவற்றவர்கள் என்று சொல்லலாம்.
இந்த குழந்தைகளை விளையாட்டு மைதானத்தில் அவர்கள் விருப்பமான நட்சத்திரங்கள் அருகில் வந்து இருக்கும்போது இவர்களை போலே மாற வேண்டும் அவர்களுக்கு ஊக்கமடைந்து வாழ்க்கையில் ஒரு நல்ல இடத்திற்கு வருவார்கள் என்ற நோக்கில் தான் குழந்தைகளை மைதானத்திற்கு கூட்டி வருகிறார்கள்.

அது மட்டுமில்லாமல் குழந்தைகளின் மனம் தூய்மையானது. எந்த வித பொறாமை கெட்ட குணமும் இல்லாதவர்கள். எளிதில் நண்பர்களை உருவாக்குபவர்கள். அதனால் அமைதியை வெளிப்படுத்த வீரர்கள் தூய்மையாக கிரிக்கெட் விளையாட வேண்டும் எதிரிகளை நியாயமான முறையில் ஜெயிக்க வேண்டும் என்பதை நினைவுபடுத்துவதற்காகவே குழந்தைகள் மைதானத்திற்கு வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
