annabishekam

சிவலிங்கத்திற்கு மட்டும் அன்னாபிஷேகம் செய்யப்படுவது ஏன்…? அதன் சிறப்பு என்ன…?

By admin on கார்த்திகை 9, 2024

Spread the love

இந்து ம வழிபாடுகளில் அபிஷேகம் என்பது மிக முக்கியமான ஒன்று. எந்த ஒரு பூஜை னாலும் சரி திருவிழா கொண்டாட்டங்கள் ஆனாலும் சரி கோவில்களில் சிலைகளுக்கு அபிஷேகம் செய்துவிட்டுதான் அடுத்தது அலங்காரம் செய்து பூஜை நடைபெறும். பால் தயிர் பன்னீர் வெண்ணெய் சந்தனம் மஞ்சள் என்ன பல வகையான பொருட்களைக் கொண்டு கடவுள்களுக்கு அபிஷேகம் செய்வார். இதில் சிவபெருமானுக்கு மிகவும் சிறப்பானதாக சிவலிங்கத்திற்கு மட்டுமே செய்யக்கூடிய ஒரு அபிஷேகம் என்றால் அது அன்னாபிஷேகம். இந்த அன்னாபிஷேகம் ஏன் சிவலிங்கத்துக்கு மட்டும் செய்யப்படுகிறது இதன் சிறப்பு என்ன என்பதைப் பற்றி இனி காண்போம்.

   

சாப்பிடுவதற்கு அன்னம் தரும் ஆண்டவனுக்கே அன்னம் படைக்கும் விழா தான் இந்த அன்னாபிஷேகம். ஐப்பசி மாத பௌர்ணமி அன்று எல்லா சிவாலயங்களும் சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்யப்படும். பௌர்ணமி அன்று தான் சந்திரன் தனது பதினாறு கலைகளுடன் பூரண சௌபாக்கியத்தோடு விளங்குகிறார். அதனால் தான் அன்றைய தினத்தில் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

   

சிவபெருமானுக்கு உகந்தது அரிசி. இந்த அரிசி பூமியில் விளைந்து தண்ணீரில் ஊறவைத்து நெருப்பில் வேகவைத்து எடுப்பதால் இந்த அரிசி பஞ்சபூதத்தின் கூட்டு எனப்படுகிறது. அதனால்தான் அன்னாபிஷேகம் செய்வது மிகவும் சிறப்பானதாக பார்க்கப்படுகிறது.

 

ஐப்பசி மாதத்தில் நடைபெறும் அன்னாபிஷேகத்தில் சிவலிங்கத்திற்கு சாற்ப்பட்டிருக்கும் அன்னத்தினால் அலங்காரம் செய்யப்பட்டிருக்கும் சிவனை தரிசித்தால் கோடி சிவதரிசனம் செய்வதற்கு சமம் என்பது ஐதீகம். சிவபெருமானுக்கு அன்த்தால் அபிஷேகம் செய்வது உச்சபட்ச பலன்களையும் நமக்குத் தரும். உலகம் முழுவதும் இருக்கும் ஜீவராசிகள் அனைத்திற்கும் குறைவில்லாமல் உணவு கிடைக்க வேண்டும் சுபிக்சமாக இருக்க வேண்டும் என்பதற்காக அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

அன்னாபிஷேகத்திற்கு கோவிலுக்கு பக்தர்கள் நம்மால் முடிந்தவற்றை வாங்கித் தரலாம். மற்ற நாட்களில் விட இந்த அன்னாபிஷேகம் நடைபெறும் நாளில் தவறாமல் சிவாலயங்களுக்கு சென்று தரிசனம் செய்யுங்கள். இதனால் உங்கள் வாழ்க்கையில் சுபிட்சம் ஏற்பட்டு முன்னேற்றம் ஏற்படும் நினைத்த காரியங்களில் எல்லாம் வெற்றி ஏற்படும் என்று நம்பப்படுகிறது.