டெல்லி செங்கோட்டையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நாட்டின் பிரதமராகக் கொடியேற்றுவார் என்று தவெக சட்டமன்ற உறுப்பினர் கல்லணை சுப்பிரமணியன் உறுதியாகத் தெரிவித்துள்ளார். முன்னதாக, தவெகவைச் சேர்ந்தவர்கள் விஜய் நாட்டின் பிரதமராவார் என்று பேசுவது, அவர்கள் இன்னும் அரசியல் முதிர்ச்சியின்றி வெறும் ‘ரசிகர் மனநிலையிலேயே’ இருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் விமர்சித்திருந்தார்.
இதற்கு உடனடியாக வலுவான பதிலடி கொடுத்துள்ள கல்லணை சுப்பிரமணியன், “நாங்கள் இதை வெறும் ரசிக மனப்பான்மையில் உணர்ச்சிவசப்பட்டுச் சொல்லவில்லை; மாறாக, விஜய் அவர்களின் திறமை, தொலைநோக்குப் பார்வை மற்றும் மக்கள் மீதான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மீது எங்களுக்கு இருக்கும் முழுமையான நம்பிக்கையின் காரணமாகவே டெல்லி செங்கோட்டையில் அவர் கொடியேற்றுவார் என்று கூறுகிறோம்” எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.
