வைகோ Vs திருமாவளவன் Vs ப.சிதம்பரம்… பனையூரில் பரபரப்பு…. தவெக-வின் முக்கிய பதவியைக் கைப்பற்றப் போவது யார்?… கசிந்த ரகசியத் தகவல்….!

By Nanthini on ஆடி 9, 2026

Spread the love

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் பதவியைப் பெறுவதில் ப.சிதம்பரம், வைகோ மற்றும் தொல்.திருமாவளவன் ஆகிய மூத்த தலைவர்களிடையே கடும் போட்டி நிலவி வருவதாக பனையூர் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக தலைவர் விஜய், கூட்டணியின் தலைமைப் பொறுப்பை ஏற்பது ஏற்கனவே உறுதியாகிவிட்ட நிலையில், கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் செல்லக்கூடிய மற்றும் தேர்தல் வியூகங்களை வகுக்கக்கூடிய ஒரு வலுவான ஒருங்கிணைப்பாளரைத் தேர்வு செய்யும் பணியில் கட்சித் தலைமை தற்போது முழுவீச்சில் இறங்கியுள்ளது.

இருப்பினும், கடந்த ஜூலை 1-ஆம் தேதி நடைபெற்ற தோழமைக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில், இந்த ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு யாரை நியமிப்பது என்பது குறித்து தலைவர்களிடையே ஒருமித்த கருத்து எட்டப்படாமல் இழுபறி நீடித்து வருவதாகக் கூறப்படுகிறது, இது அரசியல் வட்டாரத்தில் கூடுதல் பரவபரப்பைக் கிளப்பியுள்ளது.