BREAKING: 2026 தேர்தல் கூட்டணி யாருடன்?… விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு… பரபரக்கும் தமிழக அரசியல் களம்…!

By Nanthini on ஆவணி 8, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. தங்கள் கூட்டணியை பலமாக வைத்துக்கொண்டு இந்த முறையும் திமுக ஆட்சி தான் தமிழகத்தில் அமையும் என்ற நம்பிக்கையோடு முதல்வர் ஒரு பக்கம் அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கின்றார். மறுபக்கம் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக தமிழகத்தில் ஆட்சியை நிலைநாட்ட ஒரு பக்கம் வேலைகளை செய்து கொண்டிருக்கின்றது. இவர்களுக்கு நடுவே விஜய் தமிழக வெற்றி கழகம் கட்சியுடன் பயணித்து மக்களுக்கு புதிய ஆட்சியை தர வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகின்றார்.

இப்படியான நிலையில் மாற்றத்தை நோக்கிய அரசியல் பயணத்தில் அதிமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணி வைக்க விஜய் விரும்பவில்லை என்று கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. தனியார் டிவி பத்திரிக்கையாளர்களிடம் கலந்துரையாடிய விஜய், TVK தலைமையில் கூட்டணி, முதல்வர் வேட்பாளரில் ஒருபோதும் சமரசம் இல்லை என்பதில் உறுதியாக கூறியுள்ளாராம். அதிமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என TVK தரப்பு திரும்பத் திரும்ப கூறி வருவது கவனிக்கத்தக்கது.