தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரை வைத்து எப்படியாவது ஒரு படத்தையாவது தயாரித்த விட வேண்டும் என்று அனைத்து தயாரிப்பாளர்களும் போட்டி போடுவது வழக்கம் தான். நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகின்றது.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கின்றார். அது தவிர பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா உள்ளிட்ட ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்தை தொடர்ந்து தளபதியை 69 திரைப்படத்தை யார் இயக்கப் போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ஆனால் இதுவரை தளபதி 69 திரைப்படத்திற்கான எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில் தற்போது இந்த படத்தை யார் தயாரிக்கப் போவது என தயாரிப்பாளர்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். முதலில் லலித் நிறுவனம் தான் இந்த படத்தை தயாரிக்கப் போகிறது என்று கூறி வந்த நிலையில் தற்போது அந்த நிறுவனம் தயாரிக்கவில்லை என்று தகவல் வெளியாகி இருப்பதாக வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்து இருக்கின்றார். அதாவது இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் ஜெகதீஷ் அவர்களின் பார்ட்னரான ஃபேஷன் ஸ்டூடியோ சுதன் தளபதி 69 திரைப்படத்தை தயாரிக்க திட்டமிட்டு இருப்பதாக கூறியிருந்தார்.
அதாவது ஜெகதீசை வைத்து தயாரிப்பாளர் ஜெகன் தளபதி 69 திரைப்படத்தை எப்படி ஆவது கைப்பற்றி விட்டால் அப்படத்தின் லாபத்திலிருந்து ஒரு மிகப்பெரிய தொகையை ஜெகதீஷ் அவர்களுக்கு கொடுப்பதாக ஒப்பு கொண்டிருக்கிறாராம். இதற்கு இடையில் ஏஜிஎஸ் நிறுவனமும் அடுத்த திரைப்படத்தை நாங்களே தயாரிக்கிறோம் என்று போட்டி போட்டு வருவதாக கூறப்படுகின்றது. எது எப்படியோ தளபதி 69 திரைப்படத்தை யார் தயாரிக்கப் போகிறார்கள் யார் இயக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.