பழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம், சட்ட விதிமுறைகளுக்குப் புறம்பாக 3 தனி நபர்களுக்குப் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கே.கிருஷ்ணசாமி கடும் கண்டனத்தையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளார். ஆளுங்கட்சியின் முக்கியப் புள்ளிகள் அல்லது மேலிடத்தின் செல்வாக்குமிக்க நபர்களின் பின்னணி மற்றும் ஆதரவு இல்லாமல் இவ்வளவு பெரிய முறைகேடு நடக்க வாய்ப்பே இல்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, இந்த இமாலய நில மோசடி விவகாரத்தை மூடிமறைக்காமல், உயர்நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் ஒரு சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், இதில் தொடர்புடைய அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட அனைவரையும் கண்டறிந்து அவர்களுக்குக் கடுமையான தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
