தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இயக்குனராக வளம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவரது திரைப்படத்தில் நடிப்பதற்கு நீ நான் என்று தொடர்ந்து பலரும் போட்டி போட்டு வருகிறார்கள். மாநகரம் திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான இவர் அதன் பிறகு கைதி, மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட ஹிட் திரைப்படங்களை கொடுத்திருக்கின்றார். தற்போது லியோ திரைப்படத்தை இயக்கி முடித்தார்.

இந்த திரைப்படமும் இன்று வெற்றிகரமாக வெளியாகிவிட்டது. இந்த திரைப்படம் ஆரம்பமான முதலே இப்படம் எல்சியு-வில் இருக்கின்றதா? இல்லையா? என்பது ரசிகர்களின் மிகப்பெரிய கேள்வியாக இருந்தது. இதைப் பற்றி கடைசி வரை வாய் திறக்காத லோகேஷ் கனகராஜ் கடந்த மூன்று நாட்களாக லியோ திரைப்படம் தொடர்பாக 70 மணி நேரம் பேட்டி கொடுத்திருந்தார்.

இப்படி பொத்தி பொத்தி காத்து வந்த ரகசியத்தை உதயநிதி ஸ்டாலின் போட்டு உடைத்து விட்டார். அதாவது லியோ திரைப்படம் எல்சியுவில் தான் இருக்கின்றது என்று கூறிவிட்டார். இந்த செய்தி வெளியானது முதலே இந்த படத்தில் சிம்பு, தனுஷ், ராம்சரண் மூவரில் யாராவது ஒருவர் கேமியோ ரோல் செய்திருக்கிறார்கள் என்று புரளியை கிளப்பி விட்டார்கள்.

ஆனால் அப்படி எல்லாம் எதுவும் இல்லையாம். அது மட்டும் இல்லாமல் படத்தில் கடைசி ஏழு நிமிட காட்சியில் ரோலக்ஸ் வருவது போல் தனுஷ் வருகிறார் என்று கூறியிருந்தனர். அதுவும் உண்மை இல்லை என்றும் ஏழு நிமிடத்தில் கமலின் வாய்ஸ் ஓவர் மட்டும் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமில்லாமல் படத்தின் கடைசி பத்து நிமிட காட்சியை யாரும் மிஸ் பண்ணிட வேண்டாம் என்று லோகேஷ் கனகராஜ் கூறி இருந்தார். அதுதான் lcu-க்கான ஆரம்பக் காட்சியாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.
