#image_title
இந்திய சினிமாவில் தங்களுடைய சிறப்பான பங்களிப்புக்காக ஆண்டுதோறும் கலைஞர்களுக்காக ‘தாதா சாகேப் பால்கே’ என்ற விருது அளிக்கப்பட்டு வருகிறது. இந்திய சினிமாவில் வழங்கப்படும் மிக உயரிய விருதாக இந்த விருது கருதப்படுகிறது.
தமிழ் சினிமாவில் இருந்து இந்த விருதை சிவாஜி கணேசன், பாலச்சந்தர், கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் பெற்றுள்ளனர். இப்படி மிகச்சிறந்த கலைஞர்களை கௌரவிக்கும் விதமாக அளிக்கப்படும் இந்த விருதின் பின்னணி என்ன? அது யார் பெயரால் அளிக்கப்படுகிறது என்பது தெரியுமா?
துண்டிராஜ் கோவிந்த் பால்கே என்பவர்தான் பின்னாளில் தாதா சாகேப் பால்கே என்று திரைத்துறையினரால் அழைக்கப்பட்டார். இந்திய சினிமாவின் தந்தை எனப் போற்றப்படும் பால்கே, முதல் முதலாக இந்தியாவில் திரைப்படம் எடுத்தவர் என்பது அதற்குக் காரணம். லண்டன் சென்று திரைப்பட நுட்பங்களைக் கற்ற பால்கே இந்தியா வந்து ராஜா அரிச்சந்திரா என்ற படத்தை உருவாக்கி வெளியிட்டார்.
மௌனப் படமாக உருவான ராஜா அரிச்சந்திரா 1913 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வெற்றியைப் பெற்றது. இதைத் தொடர்ந்து அவர் வரிசையாக குறும்படங்களையும் , முழு நீளப்படங்களையும் எடுத்து வெளியிட்டார். இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர் என செயல்பட்ட பால்கே அவர்கள், 95 முழு நீளப் படங்கள் மற்றும் 27 குறும்படங்களை உருவாக்கியுள்ளார்.
அவர் எடுத்ததில் ‘மோகினி பாஸ்மசூர்’, சத்யவான் சாவித்ரி, ஸ்ரீ கிருஷ்ண ஜன்மா, கலியமர்தன், போன்றவை குறிப்பிடத்தகுந்த மௌனப் படங்களாக அமைந்தன. இவர் எடுத்தவை பெரும்பாலும் புராண காலப் படங்களே ஆகும்.
மௌனப் படங்கள் பேசும் படங்களாக உருமாறிய போது அந்த மாற்றத்தைப் புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறிய கலைஞர்களில் இவரும் ஒருவர். இவரின் கடைசி கால திரைப்படங்கள் தோல்வி படங்களாக அமைந்தன. அதனால் பொருளாதார ரீதியாக கடுமையான பின்னடைவை சந்தித்தார்.
உடல்நலக் குறைவால் இவர் 1944 ஆம் ஆண்டு தன்னுடைய 73 ஆவது வயதில் காலாமானார். இவரின் அளப்பரிய பங்களிப்பைக் கௌரவப்படுத்தும் விதமாகதான் ஒன்றிய அரசு ஆண்டுதோறும் அவர் பெயரில் விருதுகளை அளித்து திரைக்கலைஞர்களை கௌரவித்து வருகிறது.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…