தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் களம் நான்கு முனை போட்டியாக உள்ளது. அதாவது திமுக, அதிமுக, தமிழக வெற்றிக்கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப்போட்டி நிலவி வருகிறது. இதில் தனது கூட்டணியை பலமாக வைத்திருக்கும் திமுக எப்படியும் தங்கள் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறது. மறுபக்கம் சீமான் யாருடனும் கூட்டணி வைக்காமல் தன்னந்தனி ஆளாக கட்சியை வழிநடத்தி வருகிறார். அதேசமயம் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள இபிஎஸ் அதிமுக ஆட்சியை நிலை நாட்டுவதற்கான வியூகங்களை வகுத்து வருகிறார்.
இவர்களுக்கு நடுவே விஜயும் களத்தில் இறங்கி உள்ளதால் விஜயை தங்கள் கூட்டணியில் இழுக்கும் முயற்சியில் பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே சமீபத்தில் அதிமுகவின் மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்ததால் தற்போது விஜய் டிவி மேலும் பலம் கூடியுள்ளது. இதனால் திமுகவுக்கு போட்டியாக விஜய் தான் தற்போது களத்தில் உள்ளார்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழக வெற்றி கழகம் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இது குறித்து கட்சி நிர்வாகி அருண்ராஜ் அளித்த பேட்டியில், அரசியல் கட்சிகளை லேசாக எடை போட வேண்டாம். அவர்களுக்கு தெரியும், எப்போது கூட்டணி வைக்க வேண்டும் என்று, அந்த வகையில் தமிழக வெற்றி கழகம் கட்சியுடன் விரைவில் மற்ற கட்சிகள் கூட்டணிக்கு வரும் என்று அருண்ராஜ் தெரிவித்துள்ளார். எனவே விரைவில் தமிழக வெற்றி கழகம் கூட்டணி குறித்து அறிவிப்பை வெளியிடும் என தெரிகிறது.
