சூப்பர் ஹிட் படமான வெண்ணிற ஆடை அந்த இங்கிலீஷ் படத்திலிருந்து எடுக்கப்பட்டதா..? பிரபலம் சொன்ன தகவல்..!!

By admin on ஆனி 19, 2024

Spread the love

ஜெ.ஜெயலலிதா பிரபல நடிகையும், முன்னாள் தமிழக முதல்வரும் ஆவார். ஜெயலலிதா கிட்டத்தட்ட 127 திரைப்படங்களில் நடித்துள்ளார். எம்ஜிஆர் உடன் இணைந்து 28 படங்களில் நடித்துள்ளார். முன்னணி நடிகர்களான சிவாஜி கணேசன், எஸ்.எஸ் ராஜேந்திரன், ஜெய்சங்கர், சிவகுமார் உள்ளிட்டோருடன் இணைந்து நடித்துள்ளார்.

Vennira Aadai Movie Part 5 | வெண்ணிற ஆடை திரைப்படம் பகுதி 5 | Jayalalitha |  Super Hit Classic Movie. - YouTube

   

இவரது படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த 1965-ஆம் ஆண்டு ரிலீசான வெண்ணிற ஆறு ஆடை திரைப்படத்தின் மூலம் ஜெயலலிதா தமிழ் திரையுலகில் பயணத்தை ஆரம்பித்தார். இந்த படத்தை இயக்குனர் ஸ்ரீதர் இயக்கினார். வெண்ணிற ஆடை படம் சூப்பர் ஹிட் ஆனது. அதற்கு முக்கிய காரணம் படத்தில் இடம்பெற்ற கதாபாத்திரங்கள் தான்.

   

ஜெயலலிதா நடித்த முதல் படம் எந்த மொழியில் தெரியுமா....? | Jayalalitha 68th  Birthday Special - Tamil Filmibeat

 

ஆங்கிலத்தில் கடந்த 1962-ஆம் ஆண்டு ரிலீசான டேவிட் அண்ட் எலிசா என்ற படத்தின் மூலம் ஸ்ரீதர் ஈர்க்கப்பட்டார். அந்த படத்தில் மனநல காப்பகத்தில் இருக்கும் ஹீரோவும் ஹீரோயினும் காதலிப்பதாக கதை உருவாக்கப்பட்டது. ஆனால் தமிழில் ஹீரோயின் மட்டும் மனநல காப்பகத்தில் இருப்பது போல ஸ்ரீதர் படத்தை உருவாக்கினார்.

Imprints and Images of Indian Film Music - Remembering C.V.Sridhar, the  legendary filmmaker, on his 8th death anniversary today. Sridhar was an  extremely successful director in both Tamil and Hindi cinema, besides

தனது கணவர் இறந்த பிறகு மனநலம் பாதிக்கப்படும் ஹீரோயினை மையமாக வைத்து படம் உருவாக்கப்பட்டது. இந்த படத்தில் நடித்ததால் ஜெயலலிதா மிகவும் பிரபலமானார். முதல் படத்திலேயே அவர் பெரும்பாலான ரசிகர்களை தன்வசம் ஈர்த்தார். ஜெயலலிதா தனித்துவமான நடிப்பால் திரையுலகில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்ததற்கு இயக்குனர் ஸ்ரீதரும் ஒரு காரணம் ஆவார் . இந்த தகவலை நடிகர் சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார்.

David & Lisa Movie Review by Bud Clayman