Connect with us

அய்யயோ… வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது திடீரென பதறிய மைனா நந்தினி… என்னாச்சுன்னு தெரியுமா…?

CINEMA

அய்யயோ… வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது திடீரென பதறிய மைனா நந்தினி… என்னாச்சுன்னு தெரியுமா…?

 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று சரவணன் மீனாட்சி. இந்த தொடரில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மைனா நந்தினி. இத்தொடரின் மூலம் கிடைத்த பிரபலம் காரணமாக தற்போது இவர் மைனா நந்தினி இன்று பிரபலமாக அறியப்பட்டு வருகிறார். தனது தனிப்பட்ட நகைச்சுவைத் திறன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார்.

   

இவர் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் களம் இறங்கி கால் பதித்து கலக்கி வருகிறார். அந்த வகையில் ரோமியோ ஜூலியட், நம்ம வீட்டு பிள்ளை போன்ற திரைப்படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இவர் சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மைனா நந்தினிக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து முதல் கணவர் இறந்துவிட்டார். இதைத்தொடர்ந்து பிரபல சீரியல் நடிகரான லோகேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை மைனா நந்தினி.

இவர் அவ்வப்பொழுது தனது புகைப்படங்களையும், ரீல்ஸ் வீடியோக்களையும் இணையத்தில் பதிவு செய்து வருகிறார். தற்பொழுது இவர் தனது கணவர் (beard) மீசை இல்லாமல் இருப்பத்தை பார்த்து தான் ஷாக் ஆவதை போல கியூட்டான வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவானது இணையத்தில் படுவைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Nandhini Myna (@myna_nandhu)

Continue Reading
To Top