மெடிக்கல் டெஸ்ட் வேண்டாம்…!! உடல் கொடுக்கும் எச்சரிக்கை சிக்னல்கள்…! எந்த அறிகுறி எந்த சத்து குறைபாட்டை உணர்த்துகிறது…? இதை தெரிஞ்சிக்கோங்க…!!

By Devi Ramu on தை 21, 2026

Spread the love

நம் உடல் ஆரோக்கியத்தில் ஏதேனும் குறைபாடுகள் ஏற்படும்போது, அதை மருத்துவப் பரிசோதனைக்கு முன்பாகவே சில வெளிப்படையான அறிகுறிகள் மூலம் உடல் நமக்கு உணர்த்தும். கண்களில் மஞ்சள் நிறம் தென்படுவது கல்லீரல் தொடர்பான பாதிப்புகளையும், மூக்கினால் வாசனையை நுகர முடியாத நிலை துத்தநாகம்  சத்து குறைவையும் குறிக்கும். அதேபோல், தீராத உடல் சோர்வு வைட்டமின் டி பற்றாக்குறையையும், ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவு வைட்டமின் சி குறைபாட்டினால் ஏற்படும் நோய் எதிர்ப்புத் திறன் வீழ்ச்சியையும் வெளிப்படுத்துகின்றன.

நாக்கில் அடிக்கடி எரிச்சல் உணர்வு ஏற்படுவது உடலில் வைட்டமின் பி சத்து குறைவாக இருப்பதைக் காட்டுகிறது. மேலும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக இல்லாமல் குறையும்போது ஒருவருக்குத் தலைசுற்றல் உண்டாகலாம். இத்தகைய சிக்னல்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, உரிய சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் பெரிய அளவிலான உடல்நல பாதிப்புகளைத் தவிர்க்க முடியும். அறிகுறிகளை உதாசீனப்படுத்தாமல் உடலின் தேவையைப் புரிந்து செயல்படுவது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.