இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு என்னதான் எச்சரிக்கை விடுத்து வந்தாலும் சில மோசடிக்காரர்கள் தினம் தோறும் பொதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி தொடர் மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக whatsapp மெசேஜ், போலியான போன் கால்கள் மூலமாக ஏராளமான மோசடிகள் நடைபெறுகிறது.
அதன்படி தற்போது whatsappபில் கடந்த சில நாட்களாக RTO Challan என்ற பெயரில் மெசேஜ் வருகிறது. அதில் உங்க வண்டிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உடனே செக் பண்ணுங்க இல்லையென்றால் FIR போடப்படும் என தகவலும் சேர்த்து அனுப்பப்படுகிறது. அந்த லிங்கை கிளிக் செய்தால், ஒரு APK File, டவுன்லோட் போனில் உள்ள அனைத்து தகவல்களையும் திருடி விடுவதாக கூறப்படுகிறது. எனவே இது போன்ற மெசேஜ்கள் வந்தால் மக்கள் உஷாராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
